செவ்வாய் கிழகத்தில் நேரம் என்ன..?
செவ்வாய் கிரகத்தில், தற்போது என்ன நேரம் என்பதை நாம் இங்கிருந்தே தெரிந்துகொள்ளலாம். இதற்கு நாசா வழிவகை செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டியை அங்கு நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாசா நிறுவனத்தின் ஒருபிரிவான கோட்டார்ட் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் நிறுவனம், புதிதாக ஒரு ஆப்சை உருவாக்கியுள்ளது. இந்த ஆப்சை, நமது கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களில் நிறுவுவதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய நேரத்தினை உடனடியாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ், லினக்ஸ், மேக் உள்ளிட்ட ஆபரேடிங் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆப்ஸ், போயிங் போயிங் என்ற வெப் பிளாக் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடத்துக்கு இடம், உலகத்திலேயே நேரம் வித்தியாசப் படும்பொழுது,
ReplyDeleteநேரம் பார்ப்பதற்கு, செவ்வாய்க் கிரகத்தில், நமக்கு எந்த இடத்தைத் தெரியும்?
அல்லது முழு செவ்வாய்க் கிரகத்திற்கும் ஒரே நேரமா?
துறை சார் அறிவுள்ளவர்கள் யாராவது இருப்பின், விடையத்தை விளக்கலாமே? மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாய் அமையும்.
melum akkiraham not same size of earth
ReplyDelete