நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு ஒரு மணிநேரம்..!
நியூயார்க் இடையே ஒரு மணிநேரத்தில் பயணிக்கும் ஹைப்பர் சோனிக் விமான சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது. அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டாலர் செலவில் ‘எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்’ என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் மணிக்கு 4500 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹைப்பர் சோனிக் என அழைக்கின்றனர்.
இந்த விமானம் இன்று தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை துவக்குகிறது. இந்த விமானம் 70 ஆயிரம் உயரத்தில் பறக்கம் திறன் பெற்றது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரி்ல் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பரிட்சார்த்த சோதனை இன்று நடக்கிறது.


Post a Comment