உன்னிசைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் விரைவு - சந்தேகத்தில் ஒருவன் கைது
மட்டக்களப்பு உன்னிச்சை கிராமத்தில் தீமூட்டப்பட்ட பள்ளிவாசல் மற்றும் அங்குள்ள நிலைமைகளை கண்டறிவதற்காக தற்போது குறித்த பிரதேசத்திற்கு அமைச்சர் ரவூப் ஹகீம் , பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சென்றுள்ளனர்.
பள்ளிவாசல் மாத்திரமின்றி முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் சில கால்நடைகளுக்கும் திட்டமிட்டு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களின் பெயர்விபரங்களை பொலீசார் சேகரித்திருப்பதாகவும் அதில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலீசார் தகவல் தெரிவித்தனர்.
உன்னிச்சை கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கோடாரியினால் நேற்று சனிக்கிழமை மாலை வெட்டி தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பள்ளிவாசல் மீதான் தீவைப்பு சம்பவமும் நடைபெற்றுள்ளது.
இதேவேளை நேற்று கோடாரி தாக்குதலில் காயமடைந்த முஸ்லிம் சகோதரிக்கு தற்போது சுயநினைவு திரும்பியுள்ளது. இவரிடம் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Post a Comment