Header Ads



அரசியல் மயமாகும் இப்தார்கள்

நஜிமிலாஹி

செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்வைத்து அதற்கான பிரச்சாரத் தளம்மாக 'இப்தார்' பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அவதானிக்கலாம்.

நோம்பு நோற்பவர்கள் இப்தார் நெருங்கும் நேரத்தில் கேட்கப்படும் பிராத்தனைகள் இறைவனிடத்தில் தங்கு தடையின்றி ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இவ்வாறான நிலையில் இப்தார் நிகழ்வுகளை வைத்து எமது அரசியல்வாதிகள் தங்களது தீவிரப் பிரசாரங்களை முடக்கிவிட்டுள்ளார்கள்.
இறைவனிடம் சங்கமிக்க இருக்கும் உள்ளங்களை மற்றவர்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் பிரசாரம் செய்யப்படுவதால் நோன்பின் புனிதத்தன்மை இழந்து காணப்படுகின்றது.

நன்மையா, தீமையா என்ற சந்தேகத்திற்கு இடமான விடயங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் நாம் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.