முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது
CWC/TM
மட்டக்களப்பு இருநூறுவில் உன்னிச்சை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ள
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள நான்கு தற்காலிக குடிசைகள் மற்றும் ஒரு கடை ஆகியனவும் இதன்போது குறித்த இனந்தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உழவு இயந்திரமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று மாலை குறித்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கோடாரியினால் வெட்டப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உன்னிச்சை நலன்புரிச்சங்க தலைவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
இவ்விடயம் தொடர்பாக உன்னிச்சை நலன்புரிச்சங்க தலைவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
தாக்குதலுக்குள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு ஸஹர் செய்வதற்காக உன்னிச்சைக்கு வருகின்ற போது பள்ளிவாயல் பகுதியில் நெருப்பு பற்றியெரிவது தெரிந்ததாகவும் இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவ்விடத்திற்கு வருகைதந்த விஷேட அதிரடிப்படையினருடன் சென்று பார்த்தபோது பள்ளிவாயல் எரிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிவாயலை சுற்றியிருந்த மூன்று வீடுகளும் முற்றாக எரிந்துள்ளதாகவும் ஒரு கடையின் முன்பகுதியும் எறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உன்னிச்சை முஹ்யித்தீன் ஜூம்மாப் பள்ளிவாயல் எரிந்து கொண்டிருந்த போது பொலிஸ் விஸேட அதிரடிப்படையினர் ஸ்தலத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளதாகவும் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துல் கபூர் மேலும் தெரிவித்தார். தற்போது குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மூன்று வீடுகளில் இருந்தவர்களுக்கு என்னவாயிற்று ..?
ReplyDelete