Header Ads



கொழும்பில் மாணவர் ஊக்குவிப்பு கருத்தரங்கு

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள முஸ்லிம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அபிவிருத்தி ஒன்றியமும் வாமி நிறுவனமும் இணைந்து ஒருநாள் கருத்தரங்கையும் செயன்முறை பரீட்சையையும் நடத்தியதுடன் இப்தார் நிகழ்வினை கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது.

கல்வி அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் எஸ்.எல்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயல்முறைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களுக்கு பரில்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தியதுடன் பரீட்சைக்கு உதவிய ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது. இப்தார் நிகழ்வில் ஈரான் நாட்டு காரி கலந்து கொண்டு அழகான முறையில் கிராத் ஓதியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.