வெலிகமையில் முஸ்லிம் சிறுமி வெட்டிக்கொலை - பிரதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
எம்.எஸ். பாஹிம் + மொஹம்மத்
வெலிகமை கோட்டேகொட பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி மண்வெட்டியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பாத்திமா அப்ரா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு இளைஞனரொருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அப் பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முகமாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி சிறுமி இன்னுமொரு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் குறித்த சிறுமியை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த பின்னர் சடலத்தை வயலொன்றுக்குள் வீசியுள்ளார். இதைக் கண்ட மற்றைய சிறுமி ஓடிச் சென்ற சம்பவத்தை வீட்டில் கூறியதையடுத்தே ஊர்மக்களால் சடலம் மீட்கப்பட்டது.
கொலையாளியை பிடித்த ஊர்மக்கள், அவரை நையப்புடைத்தப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னரே கொலையாளி கொழும்பிலிருந்து வெலிகமையிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. வெலிகமை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொலை செய்தவன் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவன் என்பதால் நீதியின் கைகளிலிருந்து எப்படியேனும் விலகிவருவான். அதற்கான சாத்தியங்கள் “பௌத்த“ நாட்டில் நிறையவே இருக்கிறது. மியன்மாரில் முஸ்லிம்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டபோது எமது அரசியலாளர்களில் எந்த முஸ்லிம் அரசியலாளர் அதற்குக் குரல்கொடுத்தார் என்பது பற்றி நான் அறியத் தெரியவில்லை. அதுஅவ்வாறிருந்த இந்தச் சின்னஞ்சிறுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. நமது “உயர்ந்தவர்கள்” இவனை நீதியின் கைகளிலிருந்து தப்பிக்க விட்டால் இன்னும் எத்தனையோ மனநோயாளிகள் தோன்றி எங்கள் பிஞ்சுகளை மட்டுமல்ல இளம்யுவதிகளைக் கூட கொடூரமாகக் கொலைசெய்துவிடுவர் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை. இதில் வெலிகம முஸ்லிம்கள் ஒன்றுபட்டு கொலைசெய்தவனுக்கு சிறந்த தண்டனை வாங்கிக்கொடுக்க முன்வரவேண்டும். ஏனைய ஊர்களைச் சேர்ந்தவர்களும் இவ்விடயத்தில் முக்கிய கவனத்துடன் இருக்க வேண்டும். (காரணம் நம்மவர் ஏழைகள் எங்களில் பலர் இருக்க இஃப்தார் கொடுப்பது சர்வசமயநீதி என்ற பெயரில் மாற்றுமதத்தவர்களுக்கே - அவர்களில் வணக்கத்தலங்களில் நம்மவர் பாங்குகூறி நோன்புதிறக்கின்றனர். இது நன்மைக்கல்ல. எமது பள்ளிகளில் இதனைக் காரணம்காட்டி பிரித் ஓத வருவர் என்பதில் என்ன சந்தேகம்?
ReplyDeleteye thts rite i am 100% agree with u....
ReplyDelete