Header Ads



அமைச்சர்கள் ஹக்கீம் + அதாவுல்லா கவனத்திற்கு...!


மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு அதனை உடனடியாக பெற்றுத்தர முடியாத அமைச்சரவை அந்தஸ்துள்ள ஹக்கீமும், அதாவுள்ளாவும் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தருவார்களா என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த வருட நோன்பில் கிறீஸ் பூத பீதியில் முஸ்லிம்கள் ரமழான் இரவை சரிவர நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இந்த நோன்பில் ஹக்கீம், அதாவுள்ளா என்ற இரண்டு தரகர்களால் முஸ்லிம் மக்கள் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அம்பாரை மாவட்டத்தில் மின்சாரம் இல்லாததன் காரணமாக மக்கள் இரவுத்தொழுகையை சரிவர நிறைவேற்ற முடியாமல் உள்ளதோடு தண்ணீர் பிரச்சினைக்கும் முகம் கொடுக்கிறார்கள். இத்தனைக்கும் அதாவுள்ளாவும், ஹக்கீமும் தத்தமது சுயநல அரசியலுக்காக அம்பாரை மாவட்டத்தில் நின்று மோதிக்கொள்கிறார்களே தவிர அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மின்சாரத்தைப்பெற்றுத்தர இவர்களால் முடியவில்லை.

மின்சார ஊழியர் வேலை நிறத்தம் செய்யும் நிலை கொழும்பில் ஏற்பட்டிருந்தால் இத்தனை நாட்கள் விட்டிருப்பார்களா? நோன்பு காலத்தில் அதுவும் பெரும்பாலான முஸ்லிம்கள் எதிர் நோக்கும் 27ம் நாளை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் இருட்டில் நிறைவேற்ற வேண்டிய துர்ப்பாக்கியத்தை இந்த அமைச்சர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.  சுhதாரண மின்சாரத்தை  பெற்றுத்தரக்கூட நடவடிக்கை எடுக்கத்தெரியாத ஹக்கீமும் அதாவுள்ளாவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என ஒரு முஸ்லிம் எண்ணுவானாகில் அவனைப்போன்ற முட்டாள் இருக்க முடியாது.

இத்தகைய கையாலாகாத அமைச்சர்களுக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் பாடம் படிப்பிப்பதாயின் மரத்துக்கோ வெற்றிலைக்கோ வாக்களிப்பதை இந்த தேர்தலில் முற்றாக தவிர்க்க வேண்டும்.

12 comments:

  1. அம்பாறை மாவட்டத்தில் தற்காலத்தில் காற்று சற்று வேகமாக வீசுகின்றது. வயலில் அறுவடை வேலை செய்வோர் சிரமப்படுகின்றனர். காற்றையும் சற்று தணிந்து வீசச் சொல்லி இவர்கள் இருவரிடமும் கேட்கலாமே! மகா கோமாளி சார் நீங்கள்.

    ReplyDelete
  2. what is this 27th day my dear?

    ReplyDelete
  3. This is totally correct statements. Both are very good politics players in every circumstances.

    ReplyDelete
  4. how could you blame the politicians for everything ? . how could you say , its unfortunate to spend lailathul kathr without power?. was there power in the rasoolullah's time ?. dont be a silly man to criticise everything.

    ReplyDelete
  5. engirundhu than warrangolotheriyela

    ReplyDelete
  6. mubarak ennagathan irundingalo theriyela

    ReplyDelete
  7. ஹலோ ஜோகர் மின்சார வெட்டு அம்பாறையில் மட்டுமல்ல அது நாடு தழுவிய தொன்று, மின்சார சபையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடியால் நாடு இருளில் இருக்க அம்பாறைக்கு மட்டும் மின்சாரம் எங்கிருந்து வரும்? சும்மா ஜோகர் மாதிரி கதை விட வேண்டாம். ஆமா நீங்க யாரு, இப்ப அடிக்கடி உங்க பேரு நிவுஸ்கலுல வருகுது? ஒ தேர்தல் கால பௌர்ணமியா?

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் இந்த ஸ்டேட்மென்ட் வெளியாகி மூன்று மணி நேரத்தின் பின் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  9. Hello! MsFasly

    சும்மா நீங்க ஜொக்கர் ஆகவேணாம் சரியா!! இந்த செய்திய ஒழுங்கா வாசிச்சிட்டு கொம்மெண்ட் பண்ணுங்க மொதல் பந்தில கொட்டெழுத்துல போட்டிரிக்கித்தானே 3 நாளா கரண்ட் இல்ல என்று எந்த உலகத்துல எங்க இருக்கீங்க???

    அது மட்டுமில்ல சும்மா நாளையிலயும் அதிகமாக மின் தடங்கள் ஏற்படுவதும் இந்த கிழக்கு மாகாணம் தான்

    ReplyDelete
  10. பாஸ்லிக்கு நாட்டு நிலைமையே தெரியல்ல. சிலமணி நேர பவர் கட் அல்ல. தொடராக மூன்று நாட்கள் மின்சாரம் இருக்கவில்லை. உலகம் தெரியாத ஜோக்கர்கள்.

    ReplyDelete
  11. moulavi moulavi uggalukku yar pattam thanthedu sollugga sambadam ellathe etheyo sollureega thawba saiegga

    ReplyDelete
  12. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை!!!!!!

    தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

    மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
    (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    அராஜகம் செய்யாதீர்கள்!

    அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
    (ஸஹீஹுல் புகாரி 4403)

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
    (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

    பணியாளர்களைப் பேணுவீர்!

    மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
    (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

    அநீதம் அழிப்பீர்!

    அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
    (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

    முறைதவறி நடக்காதீர்!

    அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
    (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

    குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

    ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
    (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
    மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

    ReplyDelete

Powered by Blogger.