இலங்கையில் நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும மாநாடு சனின்கிழமை
ஸாதிக் ஷிஹான்
ஹிஜ்ரி 1433 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (18) சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் வகையில் சனிக்கிழமை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.28 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக் கொள்கின்றார்.
உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளவாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்

தக்கியாக்கள், ஷாவியாக்களின் நிர்வாகிகளுக்கு இங்கே என்ன வேலை?
ReplyDeleteபிறையை தீர்மானிக்கும் விடயத்தை உலமா சபை தனது முழுப் பொறுப்பில் கொண்டுவர வேண்டும்.
அயல் நாடுகளில் தென்படும் பிறையை அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம், ஒரிரண்டு நாட்கள் பின்தங்கும் அவலத்தை சீர் செய்துகொள்ள முடியும்.
காபிர்களால் உருவாக்கப் பட்ட நாடுகளின் எல்லைகள், அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் விடையங்களை தாமதப் படுத்த முடியுமா?
1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை லாகூரில் கண்ட பிறையை ஏற்றுக் கொண்டு பெங்களூரிலும், ஹைதராபாத்தில் தென்பட்ட பிறையை ஏற்றுக் கொண்டு இஸ்லாமாபாத்திலும் செயல் பட முடியுமாக
இருந்ததென்றால், வெள்ளையன் வெளியேறி, மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஒத்துழைப்புடன் இரண்டு நாடாக பிரிந்து விட்ட நிலையில், பாகிஸ்தானில் தென்படும் பிறையை இந்திய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றால், முஸ்லிம்களின் ஹராம் ஹலாலை மாற்றும் சக்தி மவுண்ட்பேட்டன் பிரபுவா?
எனில் நோன்பு நாளில் பெருநாள் கொண்டாடவும் முடியாது, பெருநாள் தினத்தன்று நோன்பு நோற்பது தெளிவான ஹராமும் ஆகும்.
Dear La voix
ReplyDeleteDo not misguide the people. In 1947 there was no Islamabad. Islamabad was established later after independence. So your above comment is 100 % creation from your mind, which is wrong wrong and wrong.
See this below link about Islamabad:http://www.pakistanpaedia.com/isb/islamabad.html
At the time of independence, Karachi was chosen as the capital of Pakistan. However, after assuming the reins of the government, President Muhammad Ayub Khan decided to develop a new capital for the country, which should portray the natural beauty and and aspirations of the people of Pakistan. A site north of Rawalpindi was chosen to be named as Islamabad and the new capital city of the country. Rawalpindi was designated as the temporary capital. In 1959 the site of Islamabad was chosen to replace Karachi as the capital of Pakistan. The master plan of this modern city was prepared in 1960 by M/s. Constantinos A Doxiades, a Greek firm of Architects. Construction was started in October 1961, and the city came into life on 26 October, 1966, when the first office building of Islamabad was occupied. In 1967 Islamabad was officially made the capital, and work on the city's principal buildings, streets, and facilities was completed by the mid-1970s.
சகோதரர் Mohamed irfan, இஸ்லாமாத் குறித்து நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள தகவல் சரியானதே.
ReplyDeleteகிறிஸ்துவுக்கு முன் 5000 ஆண்டளவில் கற்கால மனிதர்கள் ஸ்வான் நதியையோட்டி வாழ்ந்ததாக அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புப் படிமங்கள், நினைவுச் சின்னங்கள் மூலம் வரலாற்றாசிரியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் இன்றைய இஸ்லாமாபாத் நகரம்,நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளது போன்று பாகிஸ்தானிய சுதந்திரத்திற்கு பின்னரே நிர்மாணிக்கப் பட்டுள்ளதுதாக அறிய முடிகின்றது. தவறை சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
தவறுக்காக வருந்துகின்றேன்.
ஒரு நாடாக இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும், மனித தேவைகளுக்காக பிரிக்கப் பட்டு வெவ்வேறு நாடுகளாக மாறிய பின்னர், தனித்தனியாக பிறை பார்த்து ஒருநாள் முன், பின் ஏற்படும் அவல நிலையை சுட்டிக் காட்டவே விரும்பினேன். நமது நாட்டில் கூட தனிநாடு கேட்டு போராட்டம் ஒன்று நடைபெற்றதை நாம் அறிவோம்.
இஸ்லாமிய விவகாரமான பிறை விடையத்தை, மனிதர்கள் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப பிரித்துக்கொள்ளும் நாடுகளின் எல்லைகளைக் கொண்டு மட்டுப்படுத்திக் கொள்வது இஸ்லாத்தின்
புறத்திலிருந்து உள்ள ஒன்றல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
'Crescent Moon' என்ற பெயரிலான Google
ReplyDeleteகணக்கின் மூலம் எழுதப்பட்டுள்ள நீண்ட குறிப்பு இஸ்லாத்திற்கு பொருத்தமில்லாத ஒன்றாக உள்ளது.
ஆகில் அஹ்மத் ஷரிபுத்தீன் என்ற பெயரில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு உறுப்பினர் ஒருவர் எழுதியுள்ளதாக மேற்படி குறிப்பு அமைந்துள்ளது. ஆகில் அஹ்மத் ஷரிபுத்தீன்
என்ற பெயரில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு உறுப்பினர் ஒருவர் இருக்கின்றாரா? அப்படி உண்மையிலேயே ஒருவர் இருந்தால், அவர் மார்க்கம் தெரியாத ஒருவராக எப்படி இருக்க முடியும்?
ஆகவே ஆகில் அஹ்மத் ஷரிபுத்தீன் என்பவரை திட்டமிட்டு அவமானப் படுத்த, யாராவது நாசகாரிகள் வேண்டுமென்றே அவரது பெயரில் இந்த மடத்தனமான வேலையைச் செய்துள்ளார்களா என்று தெரியவில்லை. ஒருவனை மக்கள் முன் அவமானப் படுத்தி மடையனாகக் காட்ட இவ்வாறான செயல்களைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானதாகும்.
எனினும் குறிப்பிட்ட பின்னூட்டத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை சற்று நோக்குவோம்.
மேற்படி பின்னூட்டத்தில் பல்வேறு வானவியல் கணிப்பீடுகளுடன்
"அவ்வாறு திங்கட்கிழமை ஷவ்வால் முதல் நாளாக வருமாக இருந்தால் இவ்வருடம் றமழான் மாதத்தில் 31 நாட்கள் வரும். இது அதிசயிக்கத் தக்க விடயமல்ல. ஏனெனில் ஹிஜ்ரி 1429 இல் சஊதியிலும் அதனைப் பின்பற்றும் ஏனய நாடுகளிலும் துல்ஹிஜ்ஜா மாதத்தில் 31 நாட்கள் வந்தன. பார்க்க http://www.icoproject.org/icop/muh29.html ஆனாலும் இவ்வருட ஷவ்வால் ஆகஸ்ட் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகும் என சஊதி அரேபியாவின் உம்முல் குறா நாட்காட்டியில்| குறிக்கப்பட்டாயிற்று. பார்க்க http://moonsighting.com/ramadan.html "
என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இஸ்லாத்தில் ஹிலால் (தலைப்பிறை) தீர்மானிக்கும் விடையத்தில் வான சாஸ்திர கணிப்பீடுகளுக்கோ, தொழில் நுட்பங்களுக்கோ, தொலை நோக்கிகளுக்கோ, செயற்கைக் கோள்களுக்கோ இடமில்லை.வெற்றுக் கண்ணால் பார்த்த சாட்சி/ சாட்சிகளே ஏற்றுக்
கொள்ளப்படும் . இந்நிலையில் குறிப்பில் எழுதப்பட்டுள்ள கணிப்பீடுகள் குறித்த வான சாஸ்திர தகவல்கள், ஹிலால் தொடர்பான இஸ்லாமிய வரையறையில் எத்தகைய பெறுதியுமற்றவை.
புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள சஹீகாண ஹதீஸ்
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இன்னா உம்மதன் உம்மிய்யா லா நக்துபு வலா நஹ்ஸுபு யகூனுஷ் ஷஹ்ரு ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா அவ் ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா
நாங்கள் ஒரு உம்மி உம்மத். நாம் படிப்பையோ கணக்கு வழக்கையோ பாவிக்க மாட்டோம். மாதம் என்பது இப்படி இப்படி இப்படி ( என்று பத்து விரல்களையும் மூன்று தடவை காட்டி முப்பது எனக்
குறிப்பிட்டார்கள்). அல்லது இப்படி இப்படி இப்படி இருக்கும் ( என்று பத்து விரல்களையும் இரு தடவைகள் காட்டி இருபது என்று குறிப்பிட்டு மூன்றாவது தடவை ஒரு விரலை மடித்து ஒன்பது விரல்களைக் காட்டி
இருபத்தி ஒன்பது எனக் குறிப்பிட்டார்கள் )"
'நாம் படிப்பையோ, கணக்கு வழக்கையோ பாவிக்க மாட்டோம்' என்பது ஹிலால் (தலைப் பிறை) விடையம் தொடர்பில் சொல்லப் பட்ட முக்கிய நிபந்தனையாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் கட்டளை, மாதம் என்றால் 29 அல்லது 30 என்பது மட்டுமே. மாதத்தில் 31 நாட்கள் வருவதற்கு இஸ்லாம் ஒன்றும் கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றும் மார்க்கம் அல்ல.
ReplyDelete'29 மாலை பிறை பார்க்க வேண்டும், பிறை தென்படாதவிடத்து குறிப்பிட்ட மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்' என்பதே நபியவர்களின் கட்டளை. ஆகவே 30 ஆம் நாளும் பிறை பார்ப்பது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒன்று. கிரிகொரியின் நாட்காட்டியில்தான் 31 நாட்களைக் கொண்ட 07
மாதங்கள் காணப்படுகின்றன. இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியில் எந்த ஒரு மாதத்திற்கும் 31 நாள் வரவே முடியாது.
ஹிஜ்ரி 1429 (2008 ஆம் ஆண்டு) இல் சவூதி அரேபியாவில் துல்ஹிஜ்ஜா மாதத்தில் 31 நாட்கள் வந்தன என்று சொல்லப் பட்டுள்ளமை ஏற்றுக் கொள்வதற்கு பொருத்தமற்ற ஒன்றாகும். 30 ஆம் நாள் யாரும் பிறை பார்ப்பதில்லை. மாதத்தைப் பூர்த்தி
செய்து விட வேண்டும். இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படையில் 31 நாட்கள் என்பதற்கு இடமில்லை.
இது தொடர்பில் இவர் வழங்கியுள்ள இணைய இணைப்பானது, பிறை விடையத்தில் இஸ்லாம் அனுமதிக்காத வானவியலை,கணிப்பீடுகளை ஊக்குவிக்கும் ஒரு தளமாகும். இதிலிருந்து எவ்வித நம்பத்தகுந்த தகவல்களையும் பெற முடியாது. 1429 துல்ஹிஜ்ஜாவில் 31 நாட்கள் வந்தன என்பதனை சவூதி அரேபியாவின் ஏற்றுக்கொள்ளப்
பட்ட உரிய இணைய ஆதாரங்களுடன் மட்டுமே நிரூபிக்க வேண்டும்.
மேலும் உம்முல் குரா நாட்காட்டி குறித்தும் இவர் குறிப்பிடுகின்றார். உம்முல் குரா நாட்காட்டி என்பது எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதனை, சவூதி அரேபியாவில் உள்ள அரபு (இஸ்லாமிய) மாத அடிப்படையில் மாதாந்த ஊதியம் வழங்கும் நிறுவனங்களில் Payroll அல்லது HR அல்லது கணக்கியல் பகுதிகளில் பணியாற்றுபவர்களை / பணியாற்றியவர்களை கேட்டல் தெரிந்துகொள்ள முடியும்.
உம்முல் குரா நாட்காட்டி என்பது, நிர்வாக, அலுவலக விடையங்களில் முன்கூட்டியே திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு வசதியாக பாவிக்கப் படும் ஒன்றே தவிர, உம்முல் குரா நாட்காட்டியின் அடிப்படையில் எவ்வித மார்க்க விடயங்களும் தீர்மானிக்கப்படுவதில்லை. சவூதி அரேபியாவில் வெற்றுக் கண்ணால் காணும் ஹிலாலை (தலைப்பிறையை) அடிப்படையாக வைத்தே அனைத்து மார்க்க விடையங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. ஆகவே, மக்களை வீணாக குழப்பத்திற்கு உள்ளாக்கும் செயல்களில் ஈடுபடாமல் தவிந்துகொள்வதே சிறந்ததாகும்.
இன்று நமது நாட்டில் ஹிலால் (தலைப்பிறை) விவகாரத்தில் மக்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவுகள் வழங்கப்படாமலும்,
வானசாஸ்திரத்திட்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும், இலங்கைப் பிறை, இந்தியப் பிறை, சவூதிப் பிறை என்றல்லாம் வேறுபாடுகள் ஏற்படுத்தப் பட்டும் உள்ள நிலைமை காணப்படுகின்றது. சென்னையில் காணும் பிறையைக் கூட தலைமன்னாரில் ஏற்றுக் கொள்ளாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது. இலங்கை, இந்தியா, 1947 இல் பாகிஸ்தான், 1971 இல் வங்கதேசம் என்று மனிதர்கள் எல்லைகளை நிர்ணயித்துக் கொண்ட நாடுகள், முஸ்லிம்களை நோன்பு, பெருநாள் போன்ற மார்க்க விடையங்களில் கூட பிரித்து வைப்பதை
இஸ்லாத்தின் அடிப்படியில் ஏற்றுக் கொள்ள முடியாது.
பிறை பார்த்தல் குறித்து குர் ஆன், ஹதீஸ் என்பவற்றின் சரியான வழிகாட்டுதல்களை தேடித் பெற்று பின்பற்ற முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.