Header Ads



மண்ணெண்ணெய் விளக்கு வீழ்ந்து முஸ்லிம் சகோதரி பரிதாப மரணம் - புத்தளத்தில் பரிதாபம்

சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்த பெண் மீது மண்ணெண்ணெய் விளக்கு வீழ்ந்ததால் ஏற்பட்ட எரிகாயங்களினால் ஒரு வயதுக் குழந்தையின் தாயொருவர் பரிதாபகரமாக மரணமானார். புத்தளம் பகுதியிலுள்ள அல்-காசிம் சிட்டி மீள் குடியேற்றக் கிராமத்தில் இப்பரிதாபம் இடம்பெற்றது.

சித்தி பர்ஸானா (27) என்னும் பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார். புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணையின் போது மனைவியை காப்பாற்றச் சென்ற பெண்ணின் கணவனும் சிறு எரிகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

சாட்சிகளைப் பதிவு செய்து கொண்ட புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிஷாம் எரிகாயங்களினால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார். tn

No comments

Powered by Blogger.