Header Ads



நான் நீதியமைச்சாராக இருந்திருந்தால்..? அமைச்சர் றிசாத் பதியுதீன்

 
இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார் ஆயர் மரியாதைக்குரிய ராயப்பு ஜோசப், நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும்  வழங்கியுள்ளேன் என்று மீண்டும் , மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய் , 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை தொலைக்காட்சி ஒன்றில் இடம் பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றின் போது எழுப்பப்பபட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மெற்கண்டவாறு கூறிய அமைச்சர் றிசாத் நான் அப்படியான நியமனங்களை வழங்கியுள்ளேன் என்று நிரூபித்தால்  அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கிவிடுவேன் என்று குறிப்பிட்டார் .

அதில் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களில் 19 தமிழர்களுக்கும், இரண்டு சிங்களவர்களுக்கும் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மன்னார் ஆயர்  குறிப்பிட்டிருந்தார் இதையே முழுமையான பொய் என்று மறுத்துள்ள அமைச்சர் ரிஷாத் அதை அவர் நிரூபித்தால் தான் அரசியல் வாழ்வையே துறந்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

ஒரு மதத் தலைவர் அதுவும் முக்கியமான ஒருவர் இவ்வாறு ஏன் உண்மைக்கு புறம்பானதொன்றை கூறுகின்றார் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான பிழையான புள்ளி விபரங்களை அவருக்கு வழங்குபவர்கள் எப்படியானவர்களாக இருக்க முடியும்.எனக்கும் ஆயர் அவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த வித பிரச்சினைகளும் இருந்ததில்லை.எப்போது வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

இதனது பின்னணியில் பல சக்திகள் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது.நான் ஒரு முஸ்லிம் என்றபடியாலும்,வடக்கில் உள்ள தமிழ் மக்கள் என்னோடு இருக்கின்றார்கள் என்ற படியாலும்.இந்த அரசாங்கத்தில்ஒரு அமைச்சராக இருக்கிக்னறவன் என்றபடியாலும் என்னை பழிவாங்கும் ஒரு செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள்,வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வந்த பிறகு இம்மக்களது நலன்கள் குறித்து கவனிக்கவென புத்தளத்தில் வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் என்ற ஒன்றை ஏற்படுத்தி புத்தளம் அநுராதபுரம்,உள்ளிட்ட பல மாவட்டங்களில்  161 அகதி முகாம்களில் உள்ள மக்களது தேவைகளை பெற்றுக் கொடுக்க 150 முகாம் அதிகாரிகளை நியமித்தார்.அவர்கள் சுமார் 19 வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்கள்,பின்னர்நாட்டில் தற்போதைய சமாதான சூழல் ஏற்பட்டதாலும்,இடம் பெயர்ந்த மக்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியுற வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும்,இந்த அலுவலகத்தை மூடி அங்குள்ள அதிகாரிகளை  அவர்களது சொந்த பிரதேசங்களில் உள்ள திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு இடமாற்றம் பெற்றுக் கொடுப்பத்தற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ ,மற்றும் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் ஒன்றினைந்து சமர்த்தித்தனர்.அதன்படியில் அந்த நியமனங்கள் வழங்கப்பட்டது.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனங்களில் அதிகமானவர்கள் தமிழ் சகோதர,சகோதரிகள்,அது போல் சுகாதார ஊழியர் நியமனங்களிலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமிழ் சகோதரர்கள் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.அவ்வாறு ஒரு இனத்துக்கு மட்டும் பணியாற்றும் அமைச்சராக நான் இருக்கவில்லை.என் மூலம் ஏதும நியமனங்கள் வழகப்படுமெனில் அதனை சகல சமூகங்களுக்கும் பிரித்து கொடுத்தே வழங்குவேன்.அவ்வாறே நான் நடந்துமுள்ளேன்.

இன்றைய சூழ் நிலையில் எமக்கு எதிராக தொடராக சில ஊடகங்கள் கண்மூடித்தனமான விசமப் பிரச்சாரங்களை செய்துவருகின்றது. இலங்கையில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளையே நாங்கள் வாசிக்கின்றோம்.அது யாருடையது என்று நாம் பார்ப்பதில்லை.சில ஊடகங்களில் ஊடக தர்மத்தை பாரக்க முடிவதில்லை.என்னை ஒரு இனவாதியாக ,மத வாதியாக காண்பிப்பதை தொடராக செய்து வருகின்றார்கள்.அன்று புலிகளின் செயற்பாடுகளுக்கு சில ஊடகங்கள் வழங்கிய ஆதரவு எல்லோருக்கும் தெரியும்.
 
அன்று எதை செய்தார்களே இன்றும் அதே பாணியில் சிலர் செயற்படுகின்றார்கள். நான்செய்யாத ஒன்றை செய்த்தாக அப்பட்டமான பொய்யினை வெளியிடுவதை வேதனை தருகின்றது.அவ்வாறு என்க்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையினை அறிந்து அதனை வெளியிடும உரிமையும் ஊடகங்களுக்கு இருக்கின்றது. இது தான் ஊடக தர்ம்மாகும்.ஆனால் இன்று சில பத்திரிகைகளில் அது இல்லை.பிழையான ஒன்றை பிழைத்திருத்தம் செய்யுமாறு பதில் அனுப்பினால் அவைக் கூட பிரசுரமாவதில்லை.

என்னை அழிக்க வேண்டும் என்று சிலர் செயற்படுகின்றார்கள். அன்று தமிழ் மக்களுக்கு நான் உதவி செய்தேன்.அதனால் புலிகள் எனது பெயரை கொலைப்பட்டியலில் வைத்து முயற்சி செய்தனர். என்னைப் பொறுத்த வரையில் நான் அல்லாஹ்வை நம்புவன். எதிரிகள் எந்த சதிகளைம் ,சூழ்ச்சிகளையும் செய்தாலும் அவர்களை விட அல்லாஹ் பெரியவன்.இன்று என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு இதனை சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.

தமிழ் மக்களை பொறுத் வரையில் அவர்கள் நல்லவர்கள், என்னுடைய அரசியல் பயணத்தில் அவர்களது பங்களிப்பு பாராட்டத்தக்கது. ஆனால் புலிகளும்,அவர்களது மிஞ்சி நிற்கின்ற எஞ்ஞங்களும் செய்யும் பயங்கரவாத்த்தினால்,அந்த மக்கள் குற்றமுள்ளவர்கள் என்று ஒரு போதும் நான் கூற மாட்டேன்,அதே போன்று தான் அதிகமான மதத் தலைவர்கள்,எமது நியாயத்தின் பக்கம் உள்ளனர்.அதே போல் தான் தம்புள்ள பள்ளிவசால் விடயத்தில் சிலசாதுகள் நடந்து கொண்ட வித்த்தை சிங்கள் மக்களும்,பௌத்த மத்த் தலைவர்களும் வண்மையாக கண்டித்துள்ளனர்.அது போன்று தான் ஏனைய சில மத்த் தலைவர்களும் செய்ற்படுகின்றனர்.யதார்ர்த்த்த்த்தையும்.சத்தியத்த்தையும் கூறுவதற்கு எவருக்கும் அஞ்சத் தேவையில்லை.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எவராலும் எங்காவது அநியாயம் நடக்குமென்றால் அதனை பாரத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம்,இஸ்லாமியன் என்ற வகையில் எனக்கு எனத மார்க்கம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று எமது உயிரிலும் முதன்மையானது பள்ளிவாசல்கள் எபதை தையரியமாக சொல்ல வேண்டியவர்களிடத்தில் தெளிவாக சொல்லியிருக்கின்றோம்.

இன்று என்னை சர்வதேசத்துக்கு கூட ஒரு வித்தியாசமான மனிதராக காண்பித்துள்ளனர். என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து,எனது அமைச்சரவையில் சக அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் இருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னிடம் ஒரு வார்த்தையேனும் கேட்கவில்லை. அவ்வாறு மன்னார் சம்பவம் குறித்து என்னிடம் கேட்டிருந்தால் எனது தரப்பு நியாயங்களை கூறியிருப்பேன். எனகெதிராக சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு செய்யப் போவதாக அவரிடம் சட்டத்தரணிகள் கூறியபோது கூட எதுவுமே அவர்களிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அந்த நீதி அமைச்சராக நான் பதவி வகித்திருந்தால் அவ்வாறு ஒரு சம்பவம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு இடம் பெற்றிருக்குமெனில், மறு வினாடியே அவருடன் தொடர்பு கொண்டு அவரது நியாயத்தையும் கேட்டிருப்பேன் இந்த விடயம் எனக்கு பெரும் கவலையளித்தது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

7 comments:

  1. sir unkalukku allaha subahanathala irukkinran nenkal kawalai pada wendam

    ReplyDelete
  2. ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் ஒன்றா?
    இருவரையும் ஒப்பிடுவதே தவறு.

    ReplyDelete
  3. Yes we too pray almighty Allah for you. So nothing to worry!

    ReplyDelete
  4. தனக்கு தடை போட்டவர்களையே தனிப்பட்ட முறையில் ஹகீம் நிந்தித்ததாக எந்த தகவலும் இல்லை. இருந்தபோதும் ஹகீமும் ஆசாபாசங்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு சாதாரண மனிதர்தானே!
    தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதை இன்னும் நாங்கள் மறக்கவில்லை என்றிருக்கும் போது ஹகீமின் மனதில் ஒரு மூலையிலேனும் அந்த நாள் ஞாபகங்கள் ஒட்டிக் கொண்டிருக்காதா என்ன?
    விதைத்ததைத்தானே அறுக்க வேண்டும்.

    ReplyDelete
  5. SLMC தலைவர் ரவுப் ஹகீம்
    பாவம் அவரது இயர்கையே
    ஓர் நிகள்வு நடந்து முடிந்த பின்
    ஓடி வந்து படம் காடடுவதுதானே

    தம்புள்ளை&மன்னார்
    விடையங்கள் போதாதா?என்ன

    நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்
    அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்
    இன்ஷா அல்லாஹ் வெற்றி நம்கையில்

    காக்கயன் குளம் நண்பர்களின் பிரார்தனையும்
    என்னேரமும் உங்களுக்கு உண்டு

    ReplyDelete
  6. சட்டதரணிகள் சங்கதலைவர் ஹகீமோடு பேசுகையில் நீங்கள் எப்படி எதனையும் ஆராயும் அவகாசத்தை எடுத்துகொள்ளாமல் ஒரு இனதின் இருப்புக்கு எதிராய் போராட்ட புறபட்டு நீதிமன்றங்களை பகிஸ்கரிக்களாமென??? ஆனால் இதுவே தெனிலங்கை முஸ்லிம்களுக்கு நடந்திருந்தால் ஹகீம் ஜனாதிபதியாக இருந்தால்கூட ஆவேசபேச்சை அவிழ்துவிட்டிருப்பார் என்ன செய்வது ஆன்மாவின் வலி அவருக்கும் வரும்போது புறியும்

    ReplyDelete
  7. ஊடகங்களில் முஸ்லீம் காங்கிரஸ் விளம்பர உறவு நட்பு அபிமானம் கடந்த ஒருமாதமாக நோன்பு கஞ்சி நடவடிக்கைகளும் அதனால் வந்த பித்னாக்களும் உங்களை பத்திய செய்திகளை மறந்துவிட்டன அமைச்சரே இலங்கையை சேர்ந்த அணைத்து முஸ்லீம்களின் துவாவும் பக்கபலமும் உங்களுக்கு அல்லா ஒருவன் போதுமானவன் இன்ஷா அல்லாஹ தக்க தருணத்தில் அவன் நீதியை வழங்குவான்

    ReplyDelete

Powered by Blogger.