Header Ads



இலங்கையில் மீண்டும் பிரிட்டிஷ் எயார் வேஸ் விமான சேவை


உதயன்

கடந்த காலங்களில் நடைபெற்ற போர் காரணமாக  இடைநிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப் போக்குவரத்து சேவையான  பிரிட்டிஷ் எயார் வேஸ் விமான சேவையை மீண்டும் ஆரம்பமிக்க அந்த றிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்சமயம் நிலவும் அமைதியான சூழ்நிலையை அடுத்து வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருப்பதே இந்த விமான சேவை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் என சிறிலங்கா சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த விமான வேவை ஆரம்பபிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமான சேவை மீளவும் ஆரம்பிக்கப்படுவதால் சிறிலங்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் எனவும் எமது நாட்டைப்பற்றி ஒருசில தீய சக்திகள் மேற்கொண்டுள்ள பொய் பிரசாரத்துக்கு பதிலடியாகவும் இது அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சிறிலங்காவில் மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு சிறிலங்காவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசு புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ்த் தேசியவாதம் முனைப்பு காட்டப்பட்டு வருவதாகவும் அதனால் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குறிப்பாக பிரித்தானியாவுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடும் என்பதாலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
 

No comments

Powered by Blogger.