யாழ்ப்பாணத்தில் 53 இந்தியர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 53 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாவர். இவர்கள் விடுதிகளில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் சோதிடர்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விரைவில் இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்.
Post a Comment