நீர்கொழும்பில் இனப் பகைமை ஏற்படும் அபாயம்
நீர்கொழும்பு - காமச்சோடை கறுவாட்டுச் சந்தைக்கு அருகே 5 வருடங்களுக்கு முன்னர் இந்துக் கோயில் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அதன் அருகேயுள்ள விஸ்த்திரி மாவத்த வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அமையும் விதத்தில் குறித்த கோயிலின் தேர் ஒன்றை நிறுத்தி வைப்பதற்கான நிரந்தரக் கூடாரம் ஒன்று இப்போது அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி வீதி விஸ்தரிப்புப் பணிகள் நடக்கவிருக்கும் இத்தருணத்தில் கோயிலின் இத்தகைய செயற்பாடு பாதையைப் பயன்படுத்துவோருக்கு பெரும் அசௌகரியத்தை உண்டுபண்ணுகிறது.
குறிப்பாக சுமார் 400 வருடங்கள் பழமைவாய்ந்த முஸ்லிம் பள்ளிக்குச் செல்வதற்காக இப்பாதையும் பயன்படுவதால் இன முறுகலுக்கும் வழிவகுக்கும் அபாயம்கூட உள்ளது. இது மாநகர சபையின் அனுமதியுடன் செயற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது.
குறித்த இடததைச் சூழ கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுமே பெரும்பான்மையாக இருப்பதுடன் இந்துக்கள் 4 குடும்பங்களே காணப்படும் நிலையில் இனப்பகைமைக்கு வழிவகுக்கப்படுமானால் நிலைமை மேலும் மேசமடையவே செய்யும். எனவே இதுவிடயத்தில் குறித்த தேர் கூடாரம் உடனடியாக அகற்றப்படுவதே சிறந்தது.

யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. மாநகர சபை, வீதி அதிகார சபை, அல்லது பொலிஸார் மூலமே பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
ReplyDeleteநான்கு இந்துக் குடும்பங்கள் மட்டும் இருப்பதால் சில முஸ்லிம்கள் சண்டித்தனம் பண்ணி, போலி வீரத்தைக் காட்ட முனையலாம், பெரியவர்கள் இதற்கு அனுமதிக்கக் கூடாது.
முஸ்லிம்கள் ஒருபொழுதும் பெளத்த மதகுருமார் போல சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது.