Header Ads



இனங்களுக்கிடையே நல்லுறவுக்கு 'இப்தார்' உதவும் - பஞ்ஞானந்த தேரர்

இனங்களுக்கிடையே நட்புறவை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம்களின் இப்தார் (நோன்பு திறப்பது) நிகழ்வு உதவுமென மொனராகல பஞ்ஞானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மகாபோதியில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,

இப்தார் நிகழ்வுகள் மூலம் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் பற்றி நாம் அறிய வாய்புக் கிடைக்கிறது. பௌத்தர்களின் வழிபாடு எவ்வாறு நடைபெறுகிறதென முஸ்லிம்களுக்கு தெரியாது. முஸ்லிம்கள் எவ்வாறு வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதும் பௌத்தர்களுக்கு தெரியாது. புரிந்துணர்வு இல்லாமை காரணமாகவே இந்நாடு 30 வருட யுத்தத்தை எதிர்கொண்டது.

இனங்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் உதவும். விகாரைகளிலிருந்து ஏதேனும் தவறான செய்திகள் கிடைத்தால் அதனை தீர விசாரித்து செயற்பட வேண்டும். அதேபோன்றுதான் பள்ளிவாசல்களிலிருந்து ஏதும் தகவல் வந்தாலும் தீவிரமாக விசாரித்துப்பார்க்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.