Header Ads



இலங்கையின் கல்வித்துறை பாரிய சிக்கலில் - ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம் அறிவிப்பு

மொஹமட் ஹபீஸ்

இன்று எமது நாட்டின் கல்வித்துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.  அமைச்சர்கள் கனவு கண்டவர்கள்போல் தீடீரெனச் செயல்படுகின்றனர் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் இணைத் தலைவருமான சங்கைக்குறிய தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

(2012 08 10 மாலை) கண்டி தபாலக கேற்போர் கூடத்தில் இடம் பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மொத்த வருமானத்தின் பெரும் பகுதி ஒரு சிறு பிரிவினரிடம் மட்டுமே தங்கியுள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தின் 86  சத வீதத்தை 12 சத வீதமானோர் மற்றுமே அனுபவிக்கின்றனர்.

நாட்டில் வாழ்கின்ற 84 சதவீதமானோர் அனுபவிப்பது எமது மொத்த வருமானத்தின் சிறிய தொகையான 14 சதவீதத்தை மட்டுமே ஆகும். இதை எந்த மதக் கோட்பாடுகளும் ஏற்றுக் கொள்ளாது.

நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் வாழும் சமூகம் ஒன்றை காணவே நாம் ஆசைப் படுகின்றோம். அவ்வாறான ஒரு சமூகம் உருவாவதை வெளிநாட்டு சக்திகள் தடுக்க முயற்சி செய்கின்றன. அதை எதிர்த்தே நாம் போராடுகின்றோம். நாட்டின் சொத்துகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பதையும் நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

இன்று எமது நாட்டின் கல்வி பாரிய சவாலை எதிர்நோக்கிவுள்ளது. அமைச்சர்கள் கனவு கண்ட விதத்தில் செயல்படுகின்றனர். முதலாம் தரத்திலிருந்து பல்கலைகழக கல்வி வரை இன்று குழப்பப்பட்டுள்ளது. அரச கல்வித்துறை தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்த ஒரு நிலையை செய்து தனியார் துறைக்கு அவர்களை கவரந்து கொள்ள வைக்கும் நாடகமாகவே இதனை காண்கின்றோம்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் முதலாம் தரம் முதல் பல்கலைகழக கல்வி வரை அரச செலவில் கற்க வசதி செய்ய வேண்டும். இதுவே எங்கள் கொள்கையாகும். பல்கலைகழக பேராசிரியர்கள் இன்று போராடுவது இப்படியான இக்கட்டான நிலையிலிருந்து கல்வியை காப்பாற்றுவதற்காகவே ஆகும். என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.



 

No comments

Powered by Blogger.