Header Ads



துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் சகோதரர் வபாத், மற்றுமொருவருக்கு வெட்டுக்காயம்

அப்துல்சலாம் யாசீம்

ஹொரவ்பொத்தானை முக்குறவௌ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காணித்தகராரு காரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் சூட்டுக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மூன்று மாத கைகுழந்தையின் தந்தையான ஆதம்பாவா மிஹ்லார்(32) என தெரியவருகின்றது.
முக்குறவௌ குளத்துக்குப்பக்கத்தில் ஹம்மாது (60) வயதுடைய முதியோருக்கும் இறந்தவருக்கும் இடையில் சேனைப்பயிர்ச்செயய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகளில் ஏற்பட்ட வாக்குவாதமே காரணமாகும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நஐத் மற்றும் றஸாத் என்பவரும் சேனைக்கு தேனீர் எடுத்துச்செல்லும் போதே இச்சம்பவம் இடடம்பெற்றதாகவும், நேரில் சொட்கன் துவக்கினால் ஹம்மாது என்பவர் சுட்டதாகவும் வாக்குமூலம் வழங்கினர்.

அத்துடன் இறந்தவரின் அக்காவின் மகனான சப்ரின் கான்(18) வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி அனுராதபுர அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
சுட்டவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

 

No comments

Powered by Blogger.