முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு (படங்கள்)
ஹப்றத்
அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை, சின்னப்பாலமுனை, ஆலங்குளம் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 750க்கு மேற்பட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முக்கிய ஆதரவாளர்கள் தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் இணைந்து கொண்டு கட்சியின் அங்கத்துவத்தினைப் பெற்றுக் கொண்டனர்.
தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச கட்சி அங்கத்தவர்கள் ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் நேற்று (05) அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற பேதே இவர்கள் இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அக்கட்சியின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான எம்.எல்.ஏ.அமீர், வேட்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா சக்கி உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றம் பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.





Post a Comment