Header Ads



முஸ்லிம் அரசாங்கப் பாடசாலைகள் நாளை புதன்கிழமை ஆரம்பம்

மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள முஸ்லிம் அரச பாடசாலைகள் நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை திறக்கப்படவுள்ளன.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பனவும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. இரண்டாந் தவணை விடுமுறை, புனித றமழான் நோன்பு மாத விடுமுறை என்பனவற்றுக்காக ஜுலை 17 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளே நாளை திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டிலுள்ள தமிழ், சிங்களப் பாடசாலைகள், மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டம்பர் 03 ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.