Header Ads



கொழும்பு - கெபம்பனித்தெருவில் 420 குடியிருப்புகளை அகற்றும் திட்டம் ஆரம்பம்


அஸ்ரப் ஏ சமத்

கொழும்பு கொம்பணி வீதியில் 420 வீடுகள் அகற்றப்படும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை நவம் மாவத்தையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.

காலிமுகத் திடலிமுன் இரானுவ காணியினை  சீனாவைச் சேர்ந்த சங்கை  எனும் ஹோட்டல் கம்பணிக்கு  7 நட்சத்திர ஹோட்டல் ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்கு இக் காணியினை அரசினால்  விற்கப்பட்டது.

இக் காணியின் பிற்புறமாக  கொம்பனி வீதியில் உள்ள புகையிரத வீதியை அண்டிய பிரதேசம், கங்காரம பண்சலைஊடருத்துச் செல்லும் நவம் வீதியில் உள்ள ஹூனுப்பிட்டிய என்ற பிரதேசத்தில் உள்ள முடுக்குகளில் உள்ள பலகையிலான மற்றும் சிறிய வீடுகளே அகற்றப்படுகின்றன. இவ் வீடுகளை அகற்றும் பணியை நேற்று நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. 

இக்காணியையும் பெற்றுக் கொள்வதற்கு சீனக் கம்பணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் 7 நட்சத்திர கோட்டலுக்கருகில் முடுக்கு வீடுகள் இருப்பதனை இங்கு வரும் உல்லாசப்பிரயாணிகள் அவதாணிக்கக் கூடும். இவ்வீடுகளை அகற்றி இப்பிரதேசத்தை அழகுபடுத்துமாறு இக் கம்பணி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைவாகவே  கொம்பணிவீதியில் புகையிரத  நிலையத்தை அண்டிய 420 வீடுகள் அகற்றப்படுகின்றன. இவ்வீடுகளில் 80 வீத முஸ்லீம்களும் தமிழ்களும்  வாழ்ந்து வருகின்றனர்.  இப்பிரதேசத்தில் உள்ள 7 ஏக்கர்  காணியை அரசுக்கு சொந்தமாக்கும் வர்த்தமாணி விளம்பரம் நகர அபிவிருத்தி பாதுகாப்பு அமைச்சருமான ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 வருடத்திற்கு வீட்டு வாடகை செலுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை சம்மதம் தெரிவித்துள்ளது. இப் பகுதி மக்கள்  வாடகை வீடுகளைத் தேடித் திரிகின்றனர்.

அதன் பின்னர் அவர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கொழும்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கும்போது அகற்றப்பட்ட வீடுகளுக்கு வீடுகள்  வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்ட அலுவலகர் ஒருவர் தெரிவித்தார்.  

2 comments:

  1. 'Annamalai' enra tamilfilm thaan gnabagatthirku varugiradhu... ulla vandha pidaari, oor pidaariyai virattiya kadhayaagappoogirathu...
    thalaimurai thalaimurayaai vaalndha em makkalukku thamadhu sondha mannil vaala anumadhiyillai... naadoodigalaaga sutri thiriyave'ndiya avalanilai... oru varudatthirku vaadagaiveedam.. adhuvum ivargal kooli kettuvaargalaam.. piragu, veettukku veedaam... (ellaame nambumpadiyaagattaan irukkiradhu...) eadhoo palamoli solvadhupo'l; ke'ppayila gnei vadiyithenru pe'ppaya solluraanaam.. ke'tpaarukku enga pootchi butthi..

    Saudi mannil, annaattu makkalukke enrum munnurimai... andha arasaangamum annaattu makkalayum avargalin urimaigalayum madhikkinradhu...

    engal nilayoo paridhabam... matthalamirku irupakkam adiyenraal, emakku (mukkiyamaaga muslimgalukku)ellaapakkamu, thirumbum thisayellaam adi.

    ARAB SPIDER.

    ReplyDelete
  2. தொடர் மாடி வீடுகளை நிர்மாணித்து இம்மக்களை முதலில் குடியேற்றிய பின்னர், அவர்களின் குடியிருப்புக்களை அகற்றியிருந்தால் ஓரளவாவது நியாயம் இருக்கும். இது அநியாயம்.

    அநியாயங்கள் அதிகமாக அரங்கேறும்பொழுது அணியாயக்கரகளின் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கலாம். பாதிக்கப்பட்டவனின் துஆவுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.