ஆப்கானிஸ்தானில் 10 பொலிஸாரை சுட்டுக்கொன்ற சக பொலிஸ்
ஆப்கானிஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் சக போலீஸ்காரர் 10 பேரை சுட்டுக்கொன்றார். ஆப்கானிஸ்தானின் தென்மேற்கே நிம்ரோஸ் மாகாணத்தின் திலாராம் மாவட்டத்தின் சோதனைச்சாவடியில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவர், உடன் பணியாற்றி வந்த 10 போலீ்ஸ்காரரை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக மாகாண கவுன்சில் உறுப்பினர் ஷகீம் ஹக்கீமி தெரிவி்த்தார்.
சம்பவம் தொடர்பாக மாகாண கவர்னர் குழு ஒன்றை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் தலிபான்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆறு அமெரிக்க வீரர்களை, ஆப்கான் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். தற்போது சக நாட்டு வீரர்கள் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானில் நடந்துள்ளது.

Post a Comment