கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் டெசோ மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் அருகிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெசோ மாநாட்டை நிறுத்துமாறு இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் நடவடிக்கைகளில் இந்தியா அநாவசியமான தலையீடுகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment