இது டாக்டர்களின் தவறா..? (டாக்டர் ரயீஸின் டயறியிலிருந்து)
வைத்தியர்கள் தங்களிடம் கேட்கக் கூடாது என்று நினைக்கும் அதேவேளை பலரும் கேட்கும் ஒரு கேள்வி இது. எனக்கு ஏற்கனவே பல பிள்ளைகள் இருக்கின்றனர். கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு வயது, மனைவி இன்னும் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். இதற்கிடையில் மனைவி மீண்டும் கர்ப்பமடைந்திருக்கிறாள்.என்ன செய்வது?
இது தான் தர்மசங்கடமான அந்தக் கேள்வி. இதற்குப் பலரும் விஷேடமாக முஸ்லிம் அல்லாதவர்கள் எதிர்பார்க்கின்ற பதில் கருவைக் கலைப்பதற்கான ஆலோசனைகளை வைத்தியர்கள் சொல்ல வேண்டும் என்பது தான். சிலர் மனச்சாட்சிக்குப் பயந்து பரவாயில்லை, சிசு வளரட்டும் என்று விட்டு விடுகின்றனர். பலருக்கு இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இப்படியான நிலைமை சமூகத்தின் ஒரு பொதுவான பிரச்சினை. அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முனைவதை விட இப்படியானதொரு சந்தர்ப்பத்தை தவிர்த்துக் கொள்வதே மிகப் பொருத்தம் எனக் கருதுகின்றேன்.
பெண்களைப் படைத்த கடவுள் அவர்களின் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தை பெறக்கூடிய ஓர் அற்புதமான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறான். 1415 வயது முதல் 4550 வயது வரை ஒரு பெண்ணால் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தை பெற முடியும் (Theoretical Possibility). இருந்த போதும் இயற்கையாகவே பிறப்பில் ஒரு கட்டுப்பாட்டை கடவுள் ஏற்படுத்தியிருக்கிறான். அத்துடன் தேவைக்கேற்ப மேலும் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான அறிவையும் கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறான். இதன் விளைவு தான் பல வகையான கருத்தடை முறைகள். இவற்றுள் சில தற்காலிகமானவை. சில நிரந்தரமானவை.
ஏனெனில் உலகில் இருக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் உணவூட்டி வாழ வைக்கும் பொறுப்பு மனிதர்களுக்குரியதல்ல. அது கடவுளுக்கு உரியதாகும். தனிப்பட்ட ஒரு தம்பதியினரைப் பொறுத்தவரை மருத்துவ ரீதியான காரணங்களுக்காகவோ அல்லது மேற்சொன்ன காரணம் தவிர்ந்த தனிப்பட்ட சில விஷேட காரணங்களுக்காகவோ பிறப்பைக் கட்டுப்படுத்துவது அல்லது தற்காலிகமாகத் தள்ளிப் போடுவதை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். குழந்தைகள் பெறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட வரையறைக்குள் மனிதனுக்கு சுதந்திரத்தை வழங்கிய கடவுள் குழந்தையைப் படைக்க நாடினால் நவீன மருத்துவம் எவ்வளவு தான் கட்டுப்படுத்த முயன்றாலும் அவற்றைத் தவிடு பொடியாக்கி குழந்தைகளைப் பிறக்க வைத்துவிடுவான் என்பதைக் காண்கிறோம்.
சில வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மூன்று குழந்தைகள் உள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தமக்கு மேலும் குழந்தைகள் வேண்டாம் என்று தீர்மானித்து நிரந்தரமான குழந்தைக் கட்டுப்பாட்டு முறையை மேற்கொண்டனர். இம்முறை மூலம் பெண்ணில் முட்டை கடத்தப்படும் மற்றும் கருக்கட்டும் இடமான பலோப்பியன் குழாய் கட்டப்பட்டு இரண்டு துண்டாக வெட்டி விடப்பட்டது. (LRT Ligation and resection of tules) இப்படிச் செய்வதன் மூலம் மருத்துவ அறிவின் படி (Theoretically) குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டது.
இவ்வாறு LRT செய்து கொண்ட அந்தப் பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தைகள் பிறக்கவில்லை. அவர்களின் மற்றைய மூன்று குழந்தைகளும் பெரியவர்களாக வளர்ந்திருந்தனர். இந்த நிலையில் எதிர்பாராதவாறு அந்தப் பெண் மீண்டும் கர்ப்பமடைந்து விட்டாள். இது அந்த தம்பதியினருக்கு பெரும் பிரச்சினையாகி , தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. அந்தப் பெண் கர்ப்பமடைந்ததை ஏற்றுக்கொள்ள பெரியவர்களாகி விட்ட அவர்களின் மூன்று குழந்தைகளும் அந்தப் பெண்ணின் பெற்றோரும் மறுத்தனர். அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதபோதும் பெண்ணின் கர்ப்பத்தில் அந்தக் குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு சத்திர சிகிச்சை (LRT) செய்த அந்த வைத்தியருக்கு எதிராக அந்தப் பெற்றோர் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்தக் கர்ப்பத்தின் மூலம் குறித்த தம்பதியினர் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும் தர்மசங்கடமாக இருப்பதாகவும் சமூகத்தை எதிர்நோக்க முடியாமல் இருப்பதாகவும் கூறி அந்த வைத்தியரைக் குற்றவாளியாக்கி அவரிடமிருந்து 5 மில்லியன் ரூபா நட்ட ஈடாகக் கேட்டனர். வழக்கறிஞரின் வாதத் திறமையில் கவரப்பட்டு அவர் சொல்வது சரிதான் என்று தீர்மானித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கு முன் ஃகீகூ செய்த வைத்தியரை விசாரித்த போது அவ் வைத்தியர் இவ்வாறு பதிலளித்தார்.
எதிர்த் தரப்பு வழக்கறிஞர் சொன்ன எல்லா விடயங்களையும் முற்று முழுதாக நானும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களின் பிரச்சினை எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. நான் அந்த LRT ஒப்பரேஷனை சரியாகத் தான் செய்தேன். நான் இந்த LRT சத்திர சிகிச்சையை ஆயிரத்துக்கு மேல் செய்திருக்கிறேன். நான் செய்த ஒப்பரேஷன்களில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிலவேளைகளில் எவருமே எதிர்பாராதபடி மருத்துவத்தினால் விபரிக்க முடியாத படி நாங்கள் இறுக்கமாய் கட்டிய முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நாங்கள் இரு துண்டாக வெட்டிய அந்த பலோப்பியன் குழாய் மீண்டும் ஒட்டி விடுகிறது. பெண்ணின் சூலகம் உருவாக்கிய முட்டை வைத்தியர்கள் செய்த எல்லாக் கட்டுப்பாட்டையும் மீறி அதற்குரிய பாதையை மீண்டும் பெற்றுப் பயணித்து விடுகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை நாங்கள் அறிய மாட்டோம். 1000 பேருக்கு LRT செய்யும் போது அதில் 10 பேருக்காவது இவ்வாறு நடக்கிறது. இதற்கு நான் குற்றவாளியல்ல.
இதனை செவிமடுத்த நீதிமன்றம் இந்த வழக்கில் யாரைக் குற்றவாளி யாக்குவது என்று தெரியாமல் தடுமாறியது. நீதி வழங்க இந்த நீதிமன்றம் தகுதியற்றது என்பதே தீர்வாகச் சொல்லப்பட்டது. கடவுள் ஒரு மனிதனைப் படைக்க நாடினால் அதனை வைத்தியர்களால் தடுக்க முடியாது என்ற யதார்த்தத்தை நீதிபதி உட்பட அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

இது எல்லாம் பெரிய விசயம் இல்லை,எனேது அனுபெவம் இங்கு சொல்கின்றேன் எங்களின் இரண்டு வயது மகளுக்கு இரண்டு வயது ஆகும் வரைக்கும் தாய் பாலை கொடுத்தோம்,அதே நேரம் மனைவிக்கு முன்றாவது கர்பவும் வந்தது.மனைவிக்கு முன்றாவது கர்ப்பம் வந்ததும் இரண்டு வயது மகளுக்கு கொடுத்த பால் உடனடியாக நின்றது.இவை இயற்கையும் அல்லாஹ்வின் நாட்டபடியும்மாய் நல்ல படியாக முடிந்தது.மசஹல்லாஹ் நல்ல மகன் ஒன்றை பெற்றோம்.
ReplyDeleteஅல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் இன்னும் பிள்ளையை பெற்று கொள்ளுவோம் இன்ஷா அல்லாஹ்!.