தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் மூலம் இஸ்லாத்தை தழுவுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவனப்பிரியன்
கிருத்தவ மிஷினரிகளைப் போல திட்டமிட்ட பிரசாரம் எதுவும் இல்லை. எந்த இலவசங்களும் வழங்கப்படுவதில்லை. சவுதி அரேபியாவிலிருந்தோ அல்லது மற்ற எந்த வளைகுடா நாடுகளிலிருந்தோ பண உதவி பெறுவதில்லை. நாடு முழுக்க இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. சில இந்துத்வ வாதிகள் கோவில்களிலும் பொது இடங்களிலும் மசூதிகளிலும் குண்டுகளை வைத்து விட்டு அதற்கு கச்சிதமாக முஸ்லிம்களையே கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க இஸ்ரேலிய நாசகார திட்டங்களால் உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற பிரசாரம் ஊடகங்களால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் அரசு நலத் திட்டங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளிலும் திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு சிறந்த எதிர்காலம் இந்தியாவில் இருக்க முடியாது என்ற எண்ணமே பலரது எண்ணமாக இருக்கிறது.
இவ்வளவு இடர்பாடுகள் இருந்தும் அத்தனையையும் தூரமாக்கி இன்று சத்திய இஸ்லாத்தை ஏற்று வந்திருக்கும் இந்த புதிய முகங்களை இருகரம் நீட்டி அரவணைப்போம். நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம். பூர்வீக சொந்தங்கள் இவர்களை ஏசுவார்கள்: தூற்றுவார்கள்: அத்தனையையும் எதிர் நோக்கியே இன்று புதிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களை நம்முடைய உடன்பிறப்புகளாக நினைக்க வேண்டும். திருமண உறவுகளை அவர்களோடு ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்ட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை செல்வந்தர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தையல் மிஷின், ஆட்டோ ரிக்ஷா, வட்டியில்லாத கடன் என்று அனைத்து தரப்பு உதவிகளையும் அந்த மக்களை நோக்கி திருப்பி விட வேண்டும்.
படித்து விட்டால் தீண்டாமையும் சாதி வெறியும் தணிந்து விடும் என்று நினைத்திருந்தோம். ஆனால் முன்பு இருந்ததை விட சாதி வெறி படித்தவர்களிடம்தான் அதிகம் இருப்பதை இணைய விவாதங்களில் பார்த்து வருகிறோம். எனவே ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்த வர்ணாசிரம முறையை தகர்க்கும் ஒரே வழி: மிக இலகுவான வழி: வன்முறையற்ற வழி: இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
இந்த கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதத்தியது. அதிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இஸ்லாத்தை தழுவியவர்களின் கணக்கெடுப்பு இது. கணக்கில் வராமல் மற்ற அமைப்புகள் மூலமும் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். தவ்ஹீத் ஜமாத் மூலம் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதால் தர்ஹா வணக்கம், தாயத்து, பல தெய்வ வணக்கம், தீண்டாமை என்று மூடப் பழக்கங்களை விட்டும் தூரமாக்கப்படுவர். ஒரு வருடம் இஸ்லாமிய கல்லூரியில் சேர்க்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையையும் தொழிற் கல்வியையும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுவர். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஏக இறைவனை வணங்கி மூடப்பழக்கங்களை தூரமாக்கி சிறந்த முஸ்லிம்களாக இவர்கள் வாழ வாழ்த்துவோம். நம் தமிழகத்தின் தீராத தலைவலியாய் இருக்கும் தீண்டாமை எனும் அரக்கனை ஒழிக்கும் இது போன்ற முயற்சிகளுக்கு நம்மால் ஆன ஆதரவை தருவோம். திரு மூலர் அருளிய திருமந்திரம் கூறும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் மூதாதையர் மார்க்கத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் இவர்களை அன்போடு அரவணைப்போம்.

Post a Comment