Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் இன்னல்களை தீர்த்துவையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு இதுவரை உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றத்திற்காக பதிவு செய்துள்ள 2251 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 8,789 பேருக்கு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும், அரச அதிகாரிகளினாலோ அரச சார்பற்ற நிறுவனங்களினாலோ மேற்கொள்ளப்படவில்லை. இதனை ஜனாதிபதியாகிய உங்களின் கவனத்திற்கு முன்வைக்கிறோம்.

யாழ் மாவட்டத்தில் மீளக்குடியேறுகின்ற ஏனைய மக்களுக்கு வழங்கப்பட்ட யூ.என்.எச்.சீ.ஆர். அமைப்பின் நிவாரணத் தொகையாகிய 20,000 டூபாவும், இலங்கை அரசின் தொழில் உதவித் தொகை 25.000 ஆயிரம் ரூபாவும் வீட்டுத் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் எதுவுமே எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அரச அதிகாரிகளினால் எம்மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். குடியுரிமைப் பதிவுகள், வாக்காளர் பதிவுகள் போன்ற மிக அடிப்படையான பல்வேறு விடயங்களில் எமது மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

யாழ் மாநகர சபை சபையினாலும்கூட எமது மக்களின் தொழில் நிலைகள் மிகுந்த ஆபத்துக்களையும், இடையூறுகளையும் எதிர்கொள்கின்றன.

பழைய அகதிகள் என எம்மை அடையாளப்படுத்தி அரச, அரசசாரா உதவிகள் அனைத்தும் எமது மக்களுக்கு கிடைக்கப்பெறாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இவ்விடயத்தில் தாங்கள் உடனடியாக கவனம் செலுத்தும்படி வேண்டுகோள் விடுக்கிறோம் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.