Header Ads



பல்டி அடிக்கிறார் அலிசாஹிர் மௌலானா..?

TM

றிப்தி அலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர சபை தலைவருமான அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளாரென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர சபை தலைவருமான அலிசாஹிர் மௌலாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தி;ல் இடம்பெற்றுள்ளது.

 எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா முஸ்லி;ம் காங்கிரஸில் இணையவுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே அமைச்சர் ஹக்கீமினால் அறிவி;க்கப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் வரையும் பின்னர் 2004ஆம் ஆண்டு குறுகிய கால பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினாராக பதவி வகித்த அலிசாஹிர் மௌலானா, பின்னர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் பொருளாதார அபிவிருத்தி அலோசகராக கடமையற்றியமையும்  குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.