Header Ads



முஸ்லிம் காங்கிரஸும், அலிசாஹிர் மௌனானாவும்..!




Inamullah Masihudeen

அலி சாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சந்திப்பு ஏற்படுத்தியுள்ள கேள்விகள்..!

01 ) அலி சாஹிர் மௌலானா கருணா எல் டி டி ஈ முருகலுடன் எதோ ஒரு வகையில் சம்பத்தப் பட்டு அரச அனுசரணையில் இருக்கின்றவர் முஸ்லிம் காங்கிரசினால் உள்வாங்கப் படுவது எத்தகைய அரசியல் பின் விளைவுகளைக் கொண்டிருக்கும்?

02 ) அலி சாஹிர் மௌலானவை உள்வாங்குவதில் பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்கள் ஏன் கடும் பிரயத்தனங்களை எடுத்து தலைவருக்கு முன்னரே பேச்சு வார்த்தைகளை நடாத்தி இணைக்கப் பாடு ஒன்றிற்கு வந்திருந்தார்.?

03 ) அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் ரிஷாது ஆகியோருடனும் பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவூது அவர்கள் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளுக்கும் இந்த நகர்வுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

04 ) அவ்வாறெனின் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அரசியல் அதி உயர் பீடம் என்பவற்றின் மீது ஏன் கட்சியின் மீதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அலி சாஹிர் மௌலானா திணிக்கப் படுகின்றார.?

05 ) அவ்வாறு அவர் அவசர அவசரமாக உள்வாங்கப் படுவதற்கும் ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப் படும் என வெளி வந்த செய்திகளுக்கும் தொடர்புகள் இருக்குமா?

06 ) கருணா அம்மானின் நண்பராகிய அரச தரப்பு அலி சாஹிர் மௌலானாவிடம் முதலமைச்சர் பதவி செல்வதன் மூலம் முஸ்லிம் மக்களுக்கும் விடுதலை புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டனையிற்கும் அல்லது தமிழ் முஸ்லிம் உறவிலும் எதாவது சாதகமான அல்லது பாதகமான விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படுமா?

07 ) இந்த வேலைத்திட்டத்தின் பங்காளியாக வடக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இருந்தால் வட மாகாண முஸ்லிம் கள்மீது அரசியல் ரீதியிலான தாக்கங்கள் ஏதும் ஏற்படுமா?

09 ) முதலமைச்சர் வேட்பாளராக தகுதி பெற்ற சிரேஷ்ட அல்லது கனிஷ்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எவரும் இல்லையா?

10 ) அலி சாஹிர் மௌலானா உள்வாங்கப் பட்ட பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டணியுடன் பேசுமா?

11 ) போருக்குப் பின்னரான இலங்கையில் வட கிழக்கு தமிழ் முஸ்லிம் அரசியலில் தென்னிலங்கை பேரின மேலாண்மைவாத அரசின் வேலைத்திட்டம் ஒன்று வெல்லவைக்கப் படுவதில் முஸ்லிம்கள் அணி சேர்வது சாணக்கியமான அரசியலாகுமா?

12 ) அலி சாஹிர் மௌலானா வரும் வரை தான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களைக் கூட கலந்தாலோசிக்காமல் இதுவரை காய் நகர்த்தினார?

13 ) இனி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் முதலமைச்சர் கோஷம் வெல்வதற்கு வெளியிலிருந்து தகுதியான ஒருவர் வர வேண்டு மென்றால் இனியும் இவர்கள் கட்சி நடாத்த வேண்டுமா?

14 ) தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு உதவாத தென்னிலங்கை பேரின மேலாண்மைவாத நிகழ்ச்சி நிரலுக்கு பலிக்கடா ஆகின்ற "முஸ்லிம் முதலமைச்சர்" ஒருவர் வட கிழக்கு முஸ்லிம்களுக்கு தேவையா?
 இந்த கேள்விகளுக்கு விடை தெரியாத வர்களாக வெள்ளியன்று இடம் பெறவிருக்கும் அடுத்த உயர் பீடக் கூட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் செல்வதைவிட செல்லாமல் இருப்பதே மேல்.! ஏனென்றால் எல்லாம் எங்கோ தீர்மாணிக்கப் பட்ட படியே நடந்தேறும் இன்ஷா அல்லாஹ்!

ஹகீம்,அலி சாஹிர் உற்பட மேற் சொன்ன எந்த தனி நபருடனும் எனக்கு சொந்த கோப தாபம் கிடையாது அனைவரும் எனது நண்பர்கள். ஆனால் அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தே இங்கு பேசுகின்றேன் கதா நாயகர்களைப் பற்றி அல்ல..!

2 comments:

  1. Dont Be Work One Side Be A Good Juge....
    Dont Saw Muslims Problems To Outside.

    ReplyDelete
  2. ethu ungalathu vedai ellaa venaavagavei pogum

    ReplyDelete

Powered by Blogger.