Header Ads



முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்ற கோரிக்கை தந்திரமான திட்டமா..?

TM

கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை அரசாங்கம் இழந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் வாக்குகளை பெறும் முயற்சியில் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணியொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார்.

 உள்நோக்கம் கொண்ட சில கட்சிகள் மற்றும்   மத அமைப்புக்கள் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைய வேண்டுமென கேட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கான  தந்திரமான திட்டத்தின் ஒருபகுதியெனவும் அவர் கூறினார். 

'உள்நோக்கம் கொண்ட சில கட்சிகள்,  மதத்தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள்  முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்று கேட்டுள்ளதை நாங்கள் கவனத்திற்கொண்டுள்ளோம். இது சிறந்ததாயினும் இந்நடவடிக்கைக்கு பின்னாலுள்ள தந்திரமான திட்டத்தை நாங்கள் காண்கின்றோம். அவர்கள் முஸ்லிம்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால்,  கிழக்கு மாகாணத்தில் அரசியல் இலாபங்களை பெற அவர்கள் முயற்சித்து வருகின்றனர்' என அவர் கூறினார்.  

முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியபோதெல்லாம்; ஐக்கிய தேசியக் கட்சியே ஆதரவளித்ததெனவும் அவர் கூறினார்.

விசேடமாக மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆதரவை அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொள்ளவென கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியூதின் ஆகியோரின் கட்சிகளை ஒரே மேடைக்குக் கொண்டுவர சில முஸ்லிம் மதத் தலைவர்கள் முயற்சிப்பதாக கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் சிலரின் செயற்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.