Header Ads



அமைச்சர் றிசாத் பதியுதீன் விசாரிக்கப்படுவாரா..?


மன்னாரில் அண்மையில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மாவட்ட நீதிபதியிடம் சீ.ஐ.டி.யினர் விசாரணைகளை முடித்துக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமும் விசாரணைகள் நடைபெறலாமௌ எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் நீதிபதி அமைச்சர் றிசாத் பதியுதீன் தன்னை அச்சுறுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைய அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீனும் சீ.ஐ.டி.யின் விசாரணைக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் எமது இணையம் தொடர்புகொள்ள முயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.

TM

'மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வந்ததும், சம்பவத்துடன் தொடர்புடையதான நபர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கம் என்றவகையில், மேற்படி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். அத்துடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உரிய பாதுகாப்பு தரப்பினருக்கு ல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் நீதியும், நீதிமன்றங்களும் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பாகும். மன்னார் விடயத்திலும் நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்படும். உரிய விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கடுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் நீதிமன்றத்தினூடாக எடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று முற்பகல், கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1 comment:

  1. அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனை விசாரிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
    அப்பொழுதுதானே மன்னார் அநீதவானின் அக்கிரமங்களை, வீடியோ ஆதாரங்களை முன்வைக்க முடியும்.

    நீதிமன்ற விசாரணைகளுக்கு, மன்னார் அநீதிபதி தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு இடையூறு விளைவிக்க முடியும் என்பதால் பதவி இடைநிறுத்தம் செய்யப் பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.