இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கலவரம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்டுள்ள இனக் கலவரங்களை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
கொக்ராஜார் மாவட்டத்தில் போடோ பழங்குடியின மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் இந்திய இராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
போடோ பழங்குடி இன மக்களுக்கும், அங்கு குடியமர்ந்த வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்கும் இடைய ஏற்பட்ட மோதல்களில், சுமார் 65,000 மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில், அவர்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள ஐம்பது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Post a Comment