முஸ்லிம் ஊடவியலாளர் ஒருவரின் வேதனைகள்..!
வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிராக அண்மை காலங்களாக நடைபெற்று வரும் அநீதிகள் மற்றும் அவர்களை மீள்குடியேற்றவிடாது தடுக்கும் சம்பவங்கள் வடமாகாண முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளித்துள்ளது.
இலங்கையிலுள்ள சகல ஊடகங்களிலும் முஸ்லிம்கள் ஊடகவியலாளர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விடயங்களை முன்கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒருசில முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தமிழ் சிங்கள ஊடகங்களில் நிரந்தரமாகவும் அதிகளவான பிரதேச ஊடகவியலாளர்கள் நாடளாவிய ரீதியிலும் அவ்வூடகங்களில் கடமையாற்றி வருவதுடன் நாடளாவிய ரீதியில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை உடனுக்குடன் களத்தில் நின்று அனுப்பி வருகின்றனர்.
இதன் மூலம் அவ்வூடகங்களே பிரபலம்பெற்று வருவதுடன் வருவாயையும் பெறுகின்றது. இந்த ஊடகங்களினால் அவ்வூடகவியலாளர்கள் பெரிதாக எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்வதாக தெரியவில்லை.
சில தமிழ் ஊடகங்கள் எந்தவித ஊதியமும் அந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதில்லை. ஏன் ஒரு இலவச பத்திரிகையாவது வழங்குவதில்லை. தனது பெயர் பத்திரிகையில் வந்தால் போதும் என்று செய்திகளையும் புகைப்படங்களையும் உடனுக்குடன் களத்தில் நின்று அனுப்பி வருகின்றனர்.
இதில் குறிப்பிடக்கூடிய சுவாராஷ்யமான விடயம் என்னவென்றால் செய்திகளையும் படங்களையும் அவ்வூகங்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு அவர்களே அந்நிறுவனத்தின் பத்திரிகைகளை பணம் கொடுத்;து வாங்கி அந்நிறுவனங்களை வளர்த்து வருகின்றார்கள்.
(2)
இவ்வாறான ஊடகவியலாளர்கள் தங்களது சமூகம் சார்பாக அநீதி இழைக்கப்படும்போது அச்செய்திகளை அவ்வூடகங்களுக்கு வழங்கினால் அச்செய்திகள் பிரசுரிக்கப்படுவதில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தட்டிக்கேட்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்துவதிலிருந்து விலகிவிட்டன.
இதே ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு தேவையில்லாத விடயத்தை பெரிதுபடுத்தி முஸ்லிம்களை சந்தோசப்படுத்துவதையும் காணமுடிகின்றது.
முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் ஊடகங்கள் காட்டும் மிகப்பெரிய பாகுபாடு இதுவாகும்.
முஸ்லிம்களுக்கென்று எந்தவொரு ஊடகமும் இல்லாத நிலைமையே இவ்வாறான நிலைமைகளுக்கு முக்கிய காரணமென்பதை முஸ்லிம் சமூகமும் ஊடகவியலாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது வியடமாக அனைவரும் சிந்திக்க வேண்டிய கால கட்டம் வந்துள்ளது. இனியும் மௌனமாக இருக்க முடியாது.
தனது பெயர் பத்திரிகையில் வருவதையும் அந்நிறுவனத்தின் பத்திரிகைகளை வாங்குவதையும் நிறுத்தினாலே அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் பேருதவியாகும்.
இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து சகல ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து ஒரு தீக்கமான முடிவை எடுக்க வேண்டுமென பல ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வடமாகாண முஸ்லிம்களின் விடயம் மட்டுமல்ல நாட்டு முஸ்லிம்களின் சகல விடயங்களையும் சிறப்பாக முன்னெடுக்க முடியுமென முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகின்றது. இந்த கோரிக்கையை யாழ் முஸ்லிம் இணையம் செய்ய வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிற்றாசைகளுக்கும், பணத்துக்கும், போலிப் புகழுக்கும் அடிமையான அற்பர்களுக்கு இது புரியுமா?
ReplyDeletenanum intha karuththai atharikkiren.
ReplyDelete