Header Ads



வடமாகாணத்தில் என்ன நடைபெறுகிறது..?



ஐந்து சந்தி ஐதுரூஸ்

இன்றைய திகதியில் வடக்கில் என்ன நடைபெறுகின்றது என்ற கேள்வி முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

நச்சென்று சொல்வதனால், வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நிகழ்ச்சி நிரலின் வடிவமைப்பாளர்களுள் முக்கியமானவர்களாக புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதன் பின்னர், அந்த நிகழ்ச்சி நிரலின் அடுத்தடுத்த உரிமையாளர்களின் சாயம் வெளுக்கத்தொடங்கியிருக்கின்றது.

இதன் வெளிப்பாடுகளே இன்று மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி போலியாக ஒப்பாரி வைக்கின்றனர்.

ஆனால் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அவர்கள் மேற்கொண்ட காத்திரமான பங்களிப்பு யாது? ரோமான் கத்தோலிக்க திருச்சபை சமய நல்லிணக்கம், மத நல்லிணக்கம், அமைதி குறித்துப்பேசுகின்றது. ஆனால் அதன் முக்கியஸ்த்தர் ஒருவரே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு விரோதமாக செயற்படுகின்றார்.

தற்போது மன்னாரின் நீதிபதியவர்களும் குறித்த மதகுருவின் செல்லப்பிள்ளையே. பல தடவைகள் குறித்த நீதிபதியை நாம் மன்னாரின் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க மதகுருவின் வாசஸ்தலத்தில் சந்தித்திருக்கின்றோம். இவ்வாறாக ரோமான் கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம்களின் வெளியேற்ற நிகழ்ச்சி நிரலின் பங்காளிகள் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றது.

அடுத்து சர்வதேச சமூகம் என நாம் அடையாளப்படுத்தும் நோர்வே இந்தியா போன்ற நாடுகளும் இதன் பின்னனியில் இருந்திருக்கின்றன என்பது தற்போதைய செயற்பாடுகளின் மூலம் அறிய முடிகின்றது. எனவே இவர்கள் அரங்கேற்றும் நாடகங்களே இன்று வடக்கில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் முகமாக வடக்கின் அரச அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பல்வேறு இடையூறுகளை வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் பார்த்தும் கேட்டும் கூட எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இயக்கங்கள் வாய் மூடி இருப்பதுவே ஆச்சரியமான விடயமாகவும் வருத்தப்படவேண்டிய விடயமாகவும் இருக்கின்றது. அதைவிடவும் வருத்தம் தருகின்ர விடயம் என்னவெனில் வடக்கு முஸ்லிம்கள் இவ்விடயத்தை எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பதாகும். இது விடயத்தில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் கவனம் செலுத்த வேண்டும்.

1 comment:

  1. சொல்லப்பட்டுள்ள விடையங்கள் உண்மை.

    கட்டுரையாசிரியர் கடைசி இரண்டு வசனங்களையும் சற்று விளக்கினால், அல்லது மேலதிக தகவல்கள் தந்தால் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.