Header Ads



கோதுமை மா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் - மஹிந்த ராஜபக்ஸ உபதேசம்


மக்கள் கோதுமை மாவை அதிகமாக பயன்படுத்துவதை நிறுத்த வழிவகை செய்யவேண்டும். குரக்கன் மற்றும் அரிசி மாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்  என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் மாவட்டங்கள் ரீதியான அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து ஆராயும் ஜனாதிபதி தலைமையிலான விசேட கூட்டத் தொடரின் வரிசையில் நேற்று நுவரெலியா மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வயதிற்கு ஏற்ப உயரமில்லாத சிறுவர்கள், இளையோரின் தொகை அதிகரித்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 100ற்கு 40 வீதமானோர் வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லாமலுள்ளனர் என சுகாதாரத் துறை அதிகாரிகளினால் விடயம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பெருந்தோட்டங்களிலுள்ள மிகவும் குறைவான இடவசதி கொண்ட லயன் வீடுகளும் அதற்குள்ளேயே குசினி அமைந்திருப்பதும் காரணம் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி பெருந்தோட்ட மக்கள் கோதுமை மாவை அதிகமாக பயன்படுத்துவதை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். குரக்கன் மற்றும் அரிசி மாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

சிறுவர்களின் போஷாக்குக்கும், பெரியோரின் உடல் நலத்திற்கும் இது சிறந்த பதிலாக அமையும் என தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையினரே தற்போது கோதுமை மாவின் பாவனையைக் கைவிடாமலுள்ளனர் எனவும், நூற்றிற்குப் பதினெட்டு வீதம் கோதுமை மா இவர்களினாலேயே உபயோகப் படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஜனாதிபதி.

    கோதுமை மாவை பிரதான உணவாக உட்கொள்ளும் மக்களில் அதிகமானவர்கள், சோற்றை உண்ணும் நம்மை விட சிறந்த பலசாலிகளாகவும், நன்கு வளர்ச்சி அடைந்தவர்களாகவும் உள்ளனர்.

    அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றப் போகும் ஜனாதிபதிக்கு இது தெரியாமல் போய் விட்டதா?

    ReplyDelete
  2. The majority of the srilankan's heavily rely on wheat bread.specially the middle and the low level income people.What does M.R says to them to eat the cake instead of bread or what?

    ReplyDelete

Powered by Blogger.