Header Ads



டென்மார்க், ரஷ்யா முஸ்லிம்களின் ரமழான் தியாகம்..!

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.

அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.

அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. அங்கு 20 மணிநேரம் நோன்பு நோற்கவேண்டும் என அறிஞர்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.

4 comments:

  1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.,
    அவன் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

    ReplyDelete
  2. Masha ALLAH
    as Srilankan we are fasting about just 14hours

    ReplyDelete
  3. தஜ்ஜாலின் வருகை 40 நாட்கள் அதில் ஒருநாள் ஒரு வருடம் போலவும் அடுத்த நாள் ஒரு மாதம் போலவும் அடுத்த நாள் ஒருவாரம் போலவும் இருக்கும் அந்த நாளை அடைந்தால்அமல்களை எப்படி செய்வது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது தற்போது இருக்கும் நாட்களை போன்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.என்கிறார்கள் இதை அடிப்படையாக வைத்து இவர்கள் மார்க்கதீர்ப்பு எடுக்க முடியுமா?என நமது உலமாக்கள் விளக்கம் தந்தால் நல்லது

    ReplyDelete
  4. saleem mohideen,
    ஒரு நல்ல கேள்வியை அவர்கள் கேட்டுள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.