Header Ads



உலகத் தலைவர்களின் உணவு..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அனைத்து உணவுகளையும் பரிசோதித்த பிறகே சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்,'' என, அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், உலகத் தலைவர்களுக்கு சமைக்கும் சமையல் கலைஞர்களின் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன், கே.ஜி.பி., எனப்படும் ரஷ்ய புலனய்வுத் துறை அதிகாரியாக இருந்தவர். எனவே, அவர் சாப்பிடுவதற்கு முன், "அனைத்து உணவுகளையும் பரிசோதிப்பார்' என, அவரது முன்னாள் சமையல் கலைஞர் ஜில்லெஸ் பிரகார்டு தெரிவித்துள்ளார்.
பிரகார்டு மேலும் குறிப்பிடுகையில், "அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த போதும் அனைத்து உணவுகளும் பரிசோதிக்கப்பட்ட பிறகு சாப்பிடுவார். அவர் லண்டன் பயணம் மேற்கொண்ட போது, எப்.பி.ஐ., அதிகாரிகள் பரிசோதித்த பின் தான், உணவுகள் அவருக்கு பரிமாறப்பட்டன' என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை பொறுத்தவரை, அவர்கள் நாட்டு உணவைத் தவிர்த்து மற்ற நாட்டு உணவுகள் பரிமாறப்பட்டால் சந்தேகப்படுவார். எனவே, மற்ற நாட்டு உணவுகள் கூடுதல் பரிசோதனைக்கு பிறகே அவருக்கு பரிமாறப்படும்.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காய்ஸ் மிட்டரன்டுக்கு, விலை உயர்ந்த காளான் உணவுகள் பிடிக்குமாம்.

ஒபாமா தம்பதியர், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் விரும்புவர். ஆனால், ஒபாமாவுக்கு பீட்ரூட் மட்டும் பிடிக்காதாம்.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு, பாலாடை கட்டி உணவுகள் அதிகம் சாப்பிடுவாராம்.

இவ்வாறு வி.வி.ஐ.பி., சமையல் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
 

2 comments:

  1. ithellam seithiyakki avarhal santhhosapaduhirarhalo illaiyo anna namma santhosappaduhirom ithi enna visesam ennnenda naanum itha mulusa vasichchittan apparam than comment eluthiran huffffff

    ReplyDelete
  2. ஹபீஸ் அல் அஸாத், ஹசன் நஸ்ருல்லாஹ், அஹமதிநஜாத் ஆகியோருக்கு (ஸுன்னி) முஸ்லிம்களின் மாமிசத்தை பச்சையாக புசிக்கப் பிடிக்கும் போலும்.....

    ReplyDelete

Powered by Blogger.