Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பாஸி பஹ்ஜான்

30வருட கால புலிப்பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கழிந்தும் கடந்த 22வருடங்களுக்கு முன் வெறுங்னையுடன் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை  உடனடியாக மீளக்குடியமர்த்தக் கோரியும் சர்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள உப்புக்குளம் முஸ்லிம்களின் கோந்தப்பிட்டி மீனவத்துறையினை முஸ்லிம்களுக்கு மீளப்பெற்றுத் தரக் கோரியும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் வேண்டுகோளுக்கிணங்க நாடளாவிய ரீதியில் புனித ஜூம்மாத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.

கிழக்கு மாகாணத்திலும் காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இன்று புனித ஜூம்மாத் தொழுகையின் பின்னர் மக்கள் ஒன்று கூடி பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து இடம்பெறும் அநீதங்களை கண்டித்தும் 22 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டித்தும் இன்று காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அன்று துப்பாக்கியால் இன்று பேனையால் வெளியேற்றமா?  வடக்கு முஸ்லிம்களுக்கு வாழ்விட உரிமையைக் கொடு முஸ்லிம்களின் உரிமையை திட்டமிட்டு பறிக்காதே? அமைச்சர் றிஸாட்டின் உரிமையைப் பறிக்க நீதி துறையே அநீதி இழைக்கலாமா? ஏன எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஸமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.        















1 comment:

  1. அப்பாவிகளைச் சுட உத்தரவிட்ட அநீதிபதியை கைதுசெய் என்ற வாசகத்தை எதிர்வரும் ஆர்ப்பாட்டங்களில் மும்மொழிகளிலும் இணைத்துக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.