Header Ads



பள்ளிவாசல் கதவை திறந்தால் உலகம் அழியுமா? மூடநம்பிக்கையை தகர்த்த முஸ்லிம் போராளிகள்


வடக்கு மாலியின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான டிம்புக்து பள்ளிவாசல்களின் புனித வாயில் கதவை உடைத்துள்ளனர்.

“சிதி யெஹ்யா பள்ளிவாசலின் கதவை இஸ்லாமியவாதிகள் தகர்த்தனர். புனித கதவான இது எப்போதும் திறக்கப்படவில்லை” என குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக பாரம்பரிய சொத்துக்கள் அமைந்தள்ள இந்த பகுதியில் சுற்றுலா வழிகாட்டியான ஒருவர் இது குறித்து கூறும் போது, “ஆயுதங்களுடன் அவர்கள் வந்து அல்லாஹ் என்று கோஷமெழுப்பி கதவை உடைத்தார்கள். இது மிக அபாயகரமானது” என்றார்.

இந்த பள்ளிவாசலின் கதவு பல நூற்றாண்டுகளாக திறக்கப்படவில்லை. இதனைத் திறந்தால் உலகம் அழிந்து விடும் என உள்ளூர் வாசிகள் நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் முயற்சியாகவே இஸ்லாமிய ஆயுதக் குழு இந்த கதவை உடைத்துள்ளது.

மாலியின் டம்புக்துவில் அமைந்துள்ள இந்த புனித பள்ளிவாசல் யுனெஸ்கோவின் பாரம்பரிய சொத்தாக பதியப்பட்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த பள்ளிவாசலை தகர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த பகுதியை கைப்பற்றிய இஸ்லாமிய ஆயுதக் குழு மீது யுனெஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த பள்ளிவாசலை புனிதத் தலமாக கருதப்படுவதால் அதனை தகர்ப்பதாக இஸ்லாமிய ஆயுதக் குழு கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் உலக பாரம்பரிய சொத்துக்களை புனிதத் தலங்களை தகர்ப்பது யுத்த குற்றமாக கருதப்படும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்படி இஸ்லாமிய குழுவை எச்சரித்துள்ளது.

1 comment:

  1. HRPMD faraj

    so, demolishing DAMBULLA MASJID, DEHIWELA MASJID are WAR CRIMES, isn't it? So, why the monks who took part in damaging the masjids, still not arrested and punished as per intention of WAR CRIME LAW_UNESCO????????????????????

    ReplyDelete

Powered by Blogger.