''முதலமைச்சர் வேட்பாளர் பதவி'' ஐ.தே.க. மு.கா. பேச்சுவார்த்தை தோல்வி..?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்தியபோதும் முதலமைச்சர் வேட்பாளர் பதவி காரணமாக அந்த பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதுள்ளதாக சூரியன் அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே அதுதொடர்பில் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுவருகின்றன. பேரப் பேச்சுக்களும் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்தியபோதும் முதலமைச்சர் வேட்பாளர் பதவி காரணமாக அந்த பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு, இவ்வாறான ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக முன்னர் வெளியாகியிருந்த செய்தியொன்றை மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment