Header Ads



இந்தக் குழந்தை அழுதால் இறந்துவிடும்..!


யாரும் இறந்தால் நாம் அழுவோம். ஆனால் இந்த இரண்டு வயதுக் குழந்தையோ அழுதால் இறந்து விடும் என்றால் இக்குழந்தையினதும் பெற்றோரினதும் நிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

இது தொடர்பில் டெய்லி மெய்லில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரிட்டனைச் சேர்ந்தவர் இந்த இரண்டு வயதுக் குழந்தை, பிறக்கும் போதே இக் குழந்தையின் தலைப்பகுதியில் அரைவாசி மண்டையோடே இருந்தது. இவரது மண்டையோட்டில் 6 சென்ரி மீற்றர் பகுதி இல்லை. மூளையானது திரவத்தினாலும் அதனைச் சுற்றியுள்ள மெல்லிய  தோற்படையினாலும் சுற்றப்பட்டுள்ளது.

இந்த நோயின் பெயர் “அடம்ஸ் ஒலிவர்‘ என்று கூறும் மருத்துவர்கள் 130 பேரில்  ஒருவருக்கு மட்டுமே இது ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றதென்கின்றனர். 13 வயதிற்கு பின்னரே இக் குழந்தையின் மண்டையோடு பலமடையும் என்பதனால்  அதன் பின்னரே சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியுமென கிரேட் ஓர்மென்ட் ஸ்ரீட் வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதனால் 13 வயதாகும் வரை குழந்தையை அழவிடாது பாதுகாக்குமாறும் அப்படி அழுதால் இக் குழந்தை இறந்து விடக் கூடும் என்றும் இவர்கள் எச்சரித்துள்ளதால் குழந்தையின் பெற்றோர் நொருங்கிப் போயுள்ளனர்.

தற்போது குழந்தையின் தலைக்கு கவசம் ஒன்று அணியப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் இக் குழந்தை தலைக் கவசத்துடனேயே இருக்கிறது. அது மட்டுமன்றி இக் குழந்தையால் ஏனைய குழந்தைகளுடன் விளையாடவும் முடியாது.

இந்தக் குழந்தை பிறக்கும் போது இருந்ததை விடவும் மண்டையோடு சற்று நிரவியுள்ளதாகக் கூறினாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் அது வளர்வதற்கு இடமில்லையென்பதால் நிரந்தரமாகவே ஒரு இடைவெளி காணப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகள் என்றால் அழுவது தான் வாடிக்கை. ஆனால், இக் குழந்தையை 13 வயதுவரை அழவிடாது பார்க்க வேண்டுமானால் பெற்றோர் என்ன பாடுபட வேண்டும்? ஆனால் இதுவரை குழந்தை அழவில்லையென்பதால் பெற்றோர் மட்டுமன்றி குழந்தையும் அதிர்ஷ்டம் செய்ததாகவேயுள்ளது.


 

1 comment:

  1. O Allah!Help me in remembering you, and in thanking you, and in attaining excellence in worshiping you.

    say always,
    سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته

    'Glory be to Allah and by His praise in number as great as His creation and His own pleasure, the weight of His Throne and the ink of His words.'

    ReplyDelete

Powered by Blogger.