Header Ads



அமைச்சர் மேர்வின் சில்வாவின் அதிரடி..!

TM

தனது உத்தியோகபூர்வ வாகனம் பயணத்துக்கு தாமதமானதால் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா பஸ்ஸில் பயணித்த சம்பவமொன்று ஹசலக பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஹசலக பிரதேச பாடசாலையொன் றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் திரும்ப முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஹசலக பொலிஸார் தெரிவித்தனர். 

தனது வாகனத்துக்காக சில நிமிட நேரங்கள் காத்திருந்த அமைச்சர் மேர்வின் சில்வா, வாகனம் தயாராகாத நிலையில் மஹியங்கனை – கண்டி வழியாகப் பயணிக்கும் பஸ் ஒன்றில் ஏறி ஹசலக நகருக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, அந்த பஸ்ஸை பின்தொடர்ந்துச் சென்றுள்ள அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், ஹசலக நகரில் வைத்து அமைச்சரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கொழும்பு வந்தடைந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

No comments

Powered by Blogger.