Header Ads



மன்னாரில் நீதிமன்றம் மீது தாக்குதல் - யாழ்ப்பாண சட்டத்தரணிகளுக்கு வலித்தது

மன்னார் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மன்னாரில் மீனவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மன்னார் நீதிமன்றத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றது.

இதனைக் கண்டித்ததோடு இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் நீதவானால் 16 மீனவர்களை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் மன்னார் பிரதேச மீனவர்கள் சிலர் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

2 comments:

  1. புலிகள் நீதிபதிகலை சுட்டுக் கொல்லும் போது , வாய் மூடி இருந்தவர்கள் இன்ரு சிரு கல் வீச்சிக்கு காண்டனம் தெரிவிபது மனசாச்சிக்க்கு உருத்தலாக் இல்லையா?

    ReplyDelete
  2. நீதிக்கி துணை புறிய வேண்டிய வக்கீல்கள் அநீதிக்கி குரல் கொடுத்து நிட்கிறார்களே என்ன கொடுமை இது யுத்தம் 30 வருட பயங்கரவாதமும் இந்த பிரதேச வக்கீல்களுக்கு நீதியை அநீதியாகவும் அநீதியை நீதியாகவும் போதித்துள்ளதோ ஸ்ரீலங்காவின் நீதி சேவை ஆணைகுழுவே இந்த அட்ட காசங்களுக்கு முடிவு கட்டு நீதியை நிலை நாட்டு அநீதிக்கி அநியாயமாக அடுத்தவர்கள்மேல் குற்றம் சாட்டி ஆர்பரிக்கும் இந்த கும்பலுக்கெதிராக நடவடிக்கை எடு இதுகளின் தொழில் உரிமையை பறி!!!!

    ReplyDelete

Powered by Blogger.