இலவசக் கல்வி முறைமையை மகிந்த அரசு சீர்குலைத்துள்ளது - கபீர் ஹாசீம் எம்.பி.
இலவசக் கல்வி முறைமையை மகிந்த அரசு சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.இலங்கையில் சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கரவினால் அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மிகச் சிறந்த முறையில் முன்னெடுத்தார்.
1994ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டது அன்று முதல் இலவசக் கல்வி முறையானது சீர்குலைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டினில் வாழும் சாதாரண மக்களினுடைய பிள்ளைகள் இலவசமாக கல்வி பயிலும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் முடக்கியுள்ளது எனக் குற்றஞ்சாட்டியதுடன், நாட்டின் இலவசக் கல்வி முறைமையைப் பாதுகாக்க ஏனைய அரசியற் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment