மு.கா. தீர்மானம் - முஸ்லிம்கள் மீதான அரசின் நல்லெண்ணத்தை பாழ்படுத்தியுள்ளது
மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதானது அரசாங்கத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்யும் துரோகமாகும். முஸ்லிம் காங்கிரஸின் இத்தகைய நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பிரதியமைச்சர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படப் போகிறது என்ற பயத்தினாலும் பதவி மோகங்களுக்காகவும் அரசுடன் ஒன்றிணைந்து அமைச்சுப் பதவிகளை அலங்கரித்துக் கொண்டு வந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று எடுத்த முடிவு எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வளவு காலமும் சுய நலத்துக்காக அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் திடீரென எடுத்த முடிவு அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது கொண்டிருந்த நல்லெண்ணத்தை பாழ்படுத்தியுள்ளது ஆகவே முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து முஸ்லிம் சமுகத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்க எதுக்கு அரசுடன் ஒத்திகொண்டீர்கள். பதவிக்காக இல்லையா. ஐ.தே.க வாக்குகளை பெற்று அரசுக்கு தவிச்சென்றது வாக்களித்தவர்களுக்கு நீங்கள் செய்தது துரோகம் இல்லையா. சும்மா இரீங்க சேர்? என்னமோ நல்லவன் மாதிரி நடிக்கிறீங்க. உங்களை விட அவர்கள் பல மடங்கு மேல். யார் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தது என்பதை தம்புள்ளை பிரட்சினையின் பின்னர் கம்பளையில் நடந்த கூட்டத்தின் தீர்மானம் மூலம் நாம் கண்டு கொண்டோம்.
ReplyDeletehai cader,
ReplyDeleteyou are very big cheater & selfisher, do you know poltics, go and sleep
வாகன இறக்குமதிக்கான கோட்டாவை காப்பாற்றிக்கொள்ள அரசுடன் இணைந்த ஆசாமிதான் நம்மட காதர் மாமா இவர் பேச்சை பெரிசா எடுதுகாதீகப்பா… ஹஜ் committee ல வேற இருக்கார் மனிசன். ஏதாவது பேசனும் என்கிறதுக்காக பேசிட்டாரு விடுங்க…
ReplyDeleteஎப்படியோ ஒவ்வொரு அரசிலும் ஓன்று இரண்டு comedian இருப்பார்கள். மகிந்த மாத்தயாட அரசில் காதர் மாமாவும் அஸ்வர் மாமாவும் இருக்காங்க.
என்ன இன்னும் அஸ்வர் மாமாட சத்தத்தை காணோம்? ம்ம்ம் ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் match இல் commenting செய்த களைப்பில் இருக்கார்போல.
கனம் காதர் அவர்களே, வழமைபோல் வருகின்ற ஹஜ்ஜிப்பெருநாள் உல்ஹிய்யாவிற்காக கம்பளை பள்ளியில் எழுந்து "நானும் ஒரு மாடு " என்று கூறுங்கள். ஏழைகளின் துஆவாவது கிடைக்கும்.
ReplyDelete