Header Ads



ரஷ்யாவின் முதலாவது இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசை

ரஷ்யாவின் முதல் இஸ்லாமிய டிவி சேனல் ஆகஸ்டில் தொடங்கும் என்று ரஷ்ய அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு அல்-ஆர் டிவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ரஷ்ய முஸ்லிம்களுக்குக்கான இயக்குனர் டாமிர் தெரிவிக்கையில் இந்த அல்-ஆர் டிவி சேனல் ஆகஸ்டில் தனது ஒளிப்பரப்பை துவங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அல்-ஆர் டிவிக்கான நிதி தனிநபர் அன்பளிப்பின் மூலமும், தொழிலதிபர்களின் நிதியின் மூலமும் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் துணையுடன் ஆரம்பிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் இவர்களுக்கு அரசின் உதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சேனல் ஒளிபரப்பு சேவையை ரஷ்ய நாட்டின் பிரபலமான ட்ரை கலர் டிவி ஆப்பரேடர் நிறுவனம் ஒளிபரப்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.