Header Ads



ரமழான் மாதத்தில் மின்வெட்டு - முஸ்லிம்களுக்கு சிரமம் என்கிறார் ஜயலத் எம்.பி.

இந்த ரமழான் மாதத்தில் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்கின்றனர். இலங்கையில் இக்காலத்தில் மாலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை முஸ்லிம் மக்கள் மஹ்ரிப், இஷா போன்ற நோன்புகால தொழுகைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த நேரங்களில் தற்சமயம் மின்வெட்டு இடம்பெறுகின்றமையினால் தொழுகைகளில் ஈடுபடுகின்ற முஸ்லிம் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்பது அரச அதிகாரிகளுக்கு மறந்துபோயுள்ளது என்பது மிகவும் கவலையளிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமது சமய வழிபாடுகளில் சுதந்திரமாகவும், தடையின்றியும் ஈடுபடும் உரிமை இலங்கை வாழ் அனைத்து பிரஜைகளுக்கும் உள்ளது என்பது எமது அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள முஸ்லிம் பள்ளிகளை பாதுகாக்க முடியாத இந்த ஆட்சியிலுள்ள அரசாங்கம் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு தமது வழிபாடுகளில் ஈடுபட முடியாதபடி மின்வெட்டு அமுல்படுத்துகின்றது என்றார்.




1 comment:

  1. அடப்பாவமே, இவருக்கு முஸ்லிம்கள் மீது ரொம்பத்தான் அக்கறை போலும்.

    மன்னாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கத்தோலிக்கப் புலிகளினதும், அநீதிபதிப் புலிகளினதும் அட்டூழியங்கள்
    குறித்து இவர் ஏன் வாயே திறப்பதில்லை

    ReplyDelete

Powered by Blogger.