அரபு, ஐரோப்பிய நாடுகளில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் நாளை பிறை பார்ப்பு
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை காணப்பட்டதையடுத்தே நாளை வெள்ளிக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகிறது.
................................................................................................................................
ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறை பார்க்கும் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
நாளை மஃரிப் தொழுகை நேரமாகிய மாலை 6.32 மணிமுதல் ரமழான் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும், தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 011 5234044, 2432110, 0777 366099 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

நாட்டுக்கு நாடு பிறை வேறுபட முடியாது.
ReplyDeleteபிறை கணக்கு என்பது ஒன்றும் மந்திரம் கிடையாது.
அது முஸ்லிம்களின் நாட்காட்டி ஆகும்.
ஒரு நாட்டில் சனிக்கிழமை 2 ஆம் திகதியாகவும்,
இன்னொரு நாட்டில் அதே சனிக்கிழமை 1 ஆம் திகதியாகவும்
இருக்க முடியுமா?
இத்தகைய கோமாளித்தனம் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப் படுகின்றது.
ரமளானில் வரும் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது,
அது ஒரு இரவு என்றே சொல்லுகின்றான். ரமழானின் கடைசிப் பத்தில் வரும் ஒற்றைப்
படை இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் ஒரே இரவாக இருக்கும் பொழுது,
பிறை நாட்டுக்கு நாடு வேறுபட்டால், இரண்டு லைலத்துல் கதரா?
சிந்திக்க வேண்டாமா தலைமைகள்?