Header Ads



ஒமர் சுலைமான் அமெரிக்காவில் மரணமானார்



எகிப்தின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஒமர் சுலைமான் அமெரிக்காவில் வைத்து காலமானார். நோய்வாய் பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சுலைமான் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியில், இவர் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டிருந்தார். 70 வயதான சுலைமான் 1993 ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டிருந்தார். முபாரக்கிற்கு எதிரான போராட்டங்கள் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இவர் எகிப்தின் உப ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.
 

No comments

Powered by Blogger.