மன்னாரில் இனவாதமும், மதவாதமும் தலைவிரித்தாடுகிறது - அமைச்சர் றிசாத்
மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிபதியை தொடர்பு கொண்டு அந்தத் தீர்ப்பு பிழையானது என்று கூறியதாகவும்இ அதை அடுத்து நீதிபதி இதை மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும் வெளியான் செய்திகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் bbc செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளதாவது,
எந்தவொரு கட்டத்திலும் தான் நீதிபதியை தொடர்பு கொண்டு பேசவும் இல்லை, அச்சுறுத்தல் விடுக்கவும் இல்லை.மன்னாரில் தற்போது நடைபெற்று வரும் விஷயங்களை பார்க்கும் போது, அங்கு இனவாதம் மதவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரிகிறது.
இவ்வகையான செயல்பாடுகள் முஸ்லிம் மக்களை மன்னாரிலிருந்து துரத்துவதற்கு செய்யப்படும் ஒரு சதியாகவே தான் பார்ப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment