Header Ads



டெங்கு நுளம்பை ஒழிக்க புதிய ஆராய்ச்சி


நாட்டில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தவென புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வைத்திய ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். நுளம்புகளின் ஒலி அலைகளைக் கொண்டு அவற்றை அழிப்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேடமாக பெண் நுளம்பு இனபெருக்கத்திற்காக ஆண் நுளம்பை கவர்வது அதன் சிறகு துடிக்கும் வேகத்தை வைத்தாகும். அந்த ஒலி அலைகளை இணங்கண்டு அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஒலி அலையை உருவாக்குவது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். இந்த ஆராய்ச்சின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.