Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு


இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள வேக்கந்த் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பாரிய அமைதிப் பேரணியொன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைமையிலான அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு ள்ளதுடன், இதேபோன்று நாடு தழுவிய முறையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எமது வடபுல முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்குமாறும், எமது முஸ்லிம் சகோதரர்களுக்காக துஆப் பிரார்த்தனைகளை செய்யுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்வாறு ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கை

இதேவேளை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவும் மேற்படி சம்பவம் தொடர்பாக முஸ்லிம்களை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

22 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட வட புல முஸ்லிம்களை அரசா ங்கம் உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் கோரியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் இதற்காக அனைத்து பேதங்களையும் மறந்து முஸ்லிம்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது

வடபுல முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கவும் அதற்கு ஒத்தாசை வழங்க வும் நாடு பூராவுமுள்ள முஸ்லிம் சமூகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் நலன்களுக்காக பிரார்த்திக்குமாறும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுதிரளுமாறும் தெரிவித்துள்ள முஸ்லிம் கவுன்ஸில் எமது சமூகத்தின் ஒன்றுமையையும் ஆதரவையும் இன்று ஜும் ஆ தொழுகையின் பின் முழு உலகிற்கும் வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது

1 comment:

  1. அனைத்து முஸ்லிம்களும் பங்களிப்பு செய்வோம்.
    வன்முறைகளைத் தவிர்ப்போம்.


    இவ்விடயத்தில் உலமா சபை ஒதுங்கி நிற்பதும், மெளனம் காப்பதும் ஏன்? பெருநாளை எந்த நாளில் வைத்தால் அரசைத் திருப்திப் படுத்தலாம் என்று இப்பொழுதே யோசிக்கத் தொடங்கிவிட்டார்களோ?

    ReplyDelete

Powered by Blogger.